Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • அவரு இல்லாட்டி என்ன? இவங்க இருக்காங்களே என்று களமிறங்கும் முருகதாஸ்

அவரு இல்லாட்டி என்ன? இவங்க இருக்காங்களே என்று களமிறங்கும் முருகதாஸ்

By: Nagaraj Tue, 19 July 2022 11:39:19 PM

அவரு இல்லாட்டி என்ன? இவங்க இருக்காங்களே என்று களமிறங்கும் முருகதாஸ்

சென்னை: அவரு இல்லாட்டி என்ன? இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் அடுத்ததாக இரு பெரிய நட்சத்திரங்கள் நடிக்கும் படத்தை இயக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


தீனா, ரமணா, கஜினி, ஏழாம் அறிவு, துப்பாக்கி, கத்தி என வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி என அவர் சென்ற இடமெல்லாம் வெற்றிக்கொடி நாட்டினார்.

murugadoss,hindi,film,directed,celebrities ,முருகதாஸ், ஹிந்தி, படம், இயக்குகிறார், பிரபலங்கள்

குறிப்பாக ஹிந்தியில் கஜினி படத்தை அமீர் கானை வைத்து ரீமேக் செய்தார். அந்தப் படம் ஹிந்தியில் பெரும் வசூல் சாதனையை நிகழ்த்தியது. இந்தப் படத்துக்கு பிறகு நடிகை அசின் பாலிவுட்டிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.


துப்பாக்கி படத்தை ஹிந்தியில் தி ஹாலிடே என்ற பெயரில் இயக்கி வெற்றிபெற்றார். இதன் காரணமாக ஹிந்தி திரையுலகிலும் ஏ.ஆர்.முருகதாஸின் படங்களுக்கு நல்ல வரவேற்பு இருந்துவருகிறது. இந்நிலையில் விஜய் படத்தை முருகதாஸ் இயக்க போகிறார் என்று தகவல்கள் வந்தது. ஆனால் அதற்கு வாய்ப்பில்லை என்று தெரிய வந்துள்ளதால் ஹிந்தி சூப்பர் ஸ்டார்கள் ஷாரூக் - சல்மான்கானை வைத்து படம் இயக்க போகிறார் என்று தெரியவந்துள்ளது.

Tags :
|
|