- வீடு›
- பொழுதுபோக்கு›
- எண்ணியது எண்ணியபடி சொன்னது சொல்லியடி நடக்கும்; தயாரிப்பாளர் மகிழ்ச்சி பதிவு
எண்ணியது எண்ணியபடி சொன்னது சொல்லியடி நடக்கும்; தயாரிப்பாளர் மகிழ்ச்சி பதிவு
By: Nagaraj Wed, 14 Sept 2022 11:08:44 AM
சென்னை: எண்ணியது எண்ணியபடி, சொன்னது சொல்லியபடி 'நானே வருவேன்' செப்டம்பர் மாதம் வெளியீடு. நீங்கள் ஆவலுடன் காத்திருந்த டீசர் வரும் 15 தேதி வெளியிடப்படும், என்பதை மகிழ்வோடு தெரிவித்து கொள்கிறேன்" என்று நானே வருவேன் படம் குறித்து தயாரிப்பாளர் தாணு பதிவிட்டுள்ளார்.
செல்வராகவன் மற்றும் தனுஷ் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் 'நானே வருவேன்'. சூப்பர் ஹிட் கூட்டணியான இவர்கள், நீண்ட இடைவெளிக்கு பிறகு இணைந்துள்ளனர்.
நடிகர் தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்கும் இந்த படத்தின் புதிய
அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, படத்தின் டீசர் செப்டம்பர் 15-ஆம்
தேதி வெளியாகவுள்ளது. இவர்களுடன் இந்துஜா, யோகிபாபு, ஜெர்மன் நாட்டு நடிகை
எல்லிஅவ்ர்ராம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த
படத்தில் செல்வராகவனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இதனை
கலைப்புலி எஸ்.தாணு தனது சமூக வலைதளத்தில், "எண்ணியது எண்ணியபடி, சொன்னது
சொல்லியபடி 'நானே வருவேன்' செப்டம்பர் மாதம் வெளியீடு. நீங்கள் ஆவலுடன்
காத்திருந்த டீசர் வரும் 15 தேதி வெளியிடப்படும், என்பதை மகிழ்வோடு
தெரிவித்து கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.