- வீடு›
- பொழுதுபோக்கு›
- நடிகர் விஜய்யின் புதிய படத்தின் பெயர் என்ன?
நடிகர் விஜய்யின் புதிய படத்தின் பெயர் என்ன?
By: Nagaraj Fri, 24 Nov 2023 7:13:08 PM
சென்னை: நடிகர் விஜய் நடித்து வரும் புதிய படத்தின் பெயர் விரைவில் அறிவிக்கப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு சிஎஸ்கே என பெயரிட்டுள்ளதாக முன்பு தகவல் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
லியோ படத்தைத் தொடர்ந்து விஜய்யின் 68வது படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். மேலும், இப்படத்தில் நடிகர்கள் ஜெயராம், பிரபு தேவா, மோகன், பிரஷாந்த், வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
இப்படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் பிரம்மாண்ட பொருள்செலவில் தயாரிக்கிறது. சமீபத்தில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. தாய்லாந்தில் வெங்கட்பிரபு பிறந்தநாளுக்கு முன்பாக முக்கியமான சண்டைக் காட்சி படமாக்கப்பட்டதாக தயாரிப்பாளர் கூறியிருந்தார்.
இந்நிலையில், இப்படத்தின் பெயர் விரைவில் அறிவிக்கப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, இப்படத்திற்கு சிஎஸ்கே என பெயரிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.