Advertisement

படம் தாமதம் ஆவதற்கு என்ன காரணம்… விளக்கம் கொடுத்த இயக்குனர்

By: Nagaraj Sun, 18 Dec 2022 4:00:06 PM

படம் தாமதம் ஆவதற்கு என்ன காரணம்… விளக்கம் கொடுத்த இயக்குனர்

சென்னை: படம் வெளியாவதில் நீண்ட கால தாமதம் ஏற்பட்ட என்ன காரணம் என்று ராங்கி படத்தின் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

திரிஷா நடித்த ‘ராங்கி’ படத்தை இயக்கியவர் சரவணன். இவர் ஏற்கனவே எங்கேயும் எப்போதும், இவன் வேற மாதிரி, வலியவன் ஆகிய படங்களை இயக்கியவர். ராங்கி படத்தை சென்சார் போர்டுக்கு அனுப்பினார்.

படத்தைப் பார்த்த தணிக்கைக் குழு உறுப்பினர்கள் சர்ச்சைக்குரிய காட்சிகள் அதிகம் இருப்பதாக ஆட்சேபம் தெரிவித்ததோடு, அனுமதி வழங்க மறுத்துவிட்டனர். இதையடுத்து, அப்படம் மேல்முறையீட்டுக் குழுவுக்குக் கொண்டு செல்லப்பட்டது. குறிப்பிட்ட காட்சிகளை நீக்கினால் மட்டுமே அனுமதி வழங்க முடியும் என தெரிவித்துள்ளனர்.

ranki cinema,sensor board,time delay, ,காலதாமதம், தணிக்கை குழு, ராங்கி சினிமா

அதைத் தொடர்ந்து, தணிக்கைக் குழு, படத்தில் அமெரிக்கா, டாலர், லிபியா, ரா மற்றும் எஃப்பிஐ ஆகிய நாடுகளின் பெயர்கள் இடம்பெற்றிருந்த 30 காட்சிகளை நீக்கிவிட்டு ‘யுஏ’ சான்றிதழை வழங்கியது. படத்தின் இயக்குனர் சரவணன் கூறும்போது, “இதற்கு முந்தைய சில படங்களில் இருந்த வார்த்தைகளையே ராங்கி படத்திலும் பயன்படுத்தியுள்ளோம்.

ஒரு இளம் பெண்ணின் பிரச்சனையை சர்வதேச குழுக்கள் உரையாடும் திரைக்கதையை நாங்கள் அமைத்துள்ளோம். இதனால் வெளிநாடுகள் தொடர்பான காட்சிகள் இடம் பெற்றன. அந்த பெயர்கள் அடங்கிய காட்சிகளை தணிக்கை அதிகாரிகள் நீக்கியுள்ளனர். இதனால் படம் வெளியாவதில் நீண்ட கால தாமதம் ஏற்பட்டுள்ளது,” என்றார்.

Tags :