Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • ரன்வீர் கபூர் நடித்துள்ள அனிமல் படத்தின் டிரைலர் எப்போது? படக்குழு அறிவிப்பு

ரன்வீர் கபூர் நடித்துள்ள அனிமல் படத்தின் டிரைலர் எப்போது? படக்குழு அறிவிப்பு

By: Nagaraj Tue, 21 Nov 2023 11:40:09 AM

ரன்வீர் கபூர் நடித்துள்ள அனிமல் படத்தின் டிரைலர் எப்போது? படக்குழு அறிவிப்பு

மும்பை: 'அனிமல்' படத்தின் டிரைலர் வருகிற 23-ந்தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனிமல்' திரைப்படம் டிசம்பர் 1-ம் தேதி இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

animal,movie,trailer,date,crew,announcement ,அனிமல், திரைப்படம், டிரைலர், தேதி, படக்குழுவினர், அறிவிப்பு

பாலிவுட்டின் பிரபல நடிகரான ரன்பீர் கபூர் தற்போது 'அர்ஜுன் ரெட்டி', 'கபீர் சிங்' போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் 'அனிமல்' திரைப்படத்தில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும், அனில் கபூர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

பூஷன் குமார் மற்றும் பிரணவ் ரெட்டி வங்கா இணைந்து டி சீரிஸ் மற்றும் பத்ரகாளி பிக்சர்ஸ் மூலம் இப்படத்தை தயாரித்துள்ளனர். இந்த படம் வருகிற டிசம்பர் 1-ம் தேதி இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்த படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றன. இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, 'அனிமல்' படத்தின் டிரைலர் வருகிற 23-ந்தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|
|
|
|