Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • காவல்துறையின் மீதான மக்களின் புகார்களை யார் விசாரிப்பது? - கமல்ஹாசன் ஆவேசம்

காவல்துறையின் மீதான மக்களின் புகார்களை யார் விசாரிப்பது? - கமல்ஹாசன் ஆவேசம்

By: Monisha Fri, 03 July 2020 1:26:32 PM

காவல்துறையின் மீதான மக்களின் புகார்களை யார் விசாரிப்பது? - கமல்ஹாசன் ஆவேசம்

உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கட்சி துவங்கி அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார். கடந்த சில நாட்களாக சாத்தான்குளம் சம்பவம் குறித்து ஆவேசமாக தனது டுவிட்டரில் அவ்வப்போது பல டுவிட்டுக்களை பதிவு செய்து வருகிறார். அவருடைய டுவிட்டுக்கள் ஒவ்வொன்றும் ஆயிரக்கணக்கான லைக்ஸ்கள் மற்றும் ரீடுவீட்டுகளை பெற்று வருகிறது.

இந்த நிலையில் சாமானியர்களை காவல்துறையினர் தாக்கும் சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஒரு போரை இன்று முதல் தொடங்குவதாக கமல்ஹாசன் தற்போது தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

police,people complaint,kamal haasan,twitter,law ,காவல்துறை,மக்களின் புகார்,கமல்ஹாசன்,டுவிட்டர்,சட்டம்

சாமானியனை மரியாதையின்றி பேசுவது, தாக்குவது, பொய்வழக்கு போடுவது என காவல்துறையின் மீதான மக்களின் புகார்களை யார் விசாரிப்பது? சட்டரீதியாக இந்தப் போரை மக்கள் நீதி மய்யம் இன்று நீதி மன்றத்தில் தொடங்குகிறது. இத்தனை காலம் இதைச் செய்யாத ஆண்ட, ஆளும் கட்சிகளை மக்கள் அகற்றும் நேரம் இது.

கமல்ஹாசனின் இந்த புதிய முயற்சி வெற்றி அடையும் என அவரது கட்சியினர் மட்டுமின்றி தமிழக மக்களும் எதிர்பார்த்து வருகின்றனர்.

Tags :
|