Advertisement

தனுஷின் 44வது படத்தின் இயக்குனர் யார்?

By: Monisha Fri, 05 June 2020 5:54:05 PM

தனுஷின் 44வது படத்தின் இயக்குனர் யார்?

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த 40வது திரைப்படமான ’ஜகமே தந்திரம்’ ரிலீஸுக்கு தயாராக உள்ளது. இந்த திரைப்படம் ஓடிடியில் ரிலீஸாக வாய்ப்பு இருப்பதாகவும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேபோல் தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கிய ’கர்ணன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் தனுஷ் நடிக்க உள்ள மற்றொரு திரைப்படத்தை கார்த்திக் நரேன் இயக்க உள்ளார். இந்த படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு லாக்டவுன் முடிந்தவுடன் தொடங்கவுள்ளது.

dhanush,karthik subburaj,karthik narain,sun pictures,mithran jawahar ,தனுஷ்,கார்த்திக் சுப்புராஜ்,கார்த்திக் நரேன்,சன் பிக்சர்ஸ்,மித்ரன் ஜவஹர்

அதே சமயம், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனுஷின் 44வது படத்தை தயாரிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த படத்தை தனுஷே இயக்குவார் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி இந்த படத்தை மித்ரன் ஜவஹர் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே தனுஷ் நடித்த ’யாரடி நீ மோகினி’, உத்தமபுத்திரன்’ மற்றும் ‘குட்டி ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

தனுஷின் 44வது படத்தின் மித்ரன் ஜவஹர் இயக்கும் தகவல் உறுதி செய்யப்பட்டால் தனுஷுடன் நான்காவது முறையாக இணையவுள்ளார். மேலும் இந்த படத்தின் கதை திரைக்கதை மற்றும் வசனம் ஆகியவற்றை ஏற்கனவே தனுஷ் எழுதி விட்டார் என்பதும் இந்த படத்தை மித்ரன் ஜவஹர் இயக்க மட்டுமே உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags :