- வீடு›
- பொழுதுபோக்கு›
- அரண்மனை3 படத்தில் பேய் கேரக்டரில் வருபவர் யார்?
அரண்மனை3 படத்தில் பேய் கேரக்டரில் வருபவர் யார்?
By: Monisha Fri, 04 Sept 2020 4:21:43 PM
சுந்தர் சி இயக்கி வரும் அரண்மனை3 படத்தில் நடிகர் ஆர்யா தான் பேய் கேரக்டரில் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சுந்தர் சி இயக்கிய ’அரண்மனை’ மற்றும் ’அரண்மனை 2’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற நிலையில் தற்போது அவர் இயக்கி வரும் திரைப்படம் ’அரண்மனை 3’.இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாகவும் தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது
சுந்தர் சி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் ஆர்யா முக்கிய கேரக்டரிலும் ராஷிகன்னா, ஆண்ட்ரியா மற்றும் சாக்ஷி அகர்வால் ஆகியோர் நாயகிகளாகவும் நடித்து வருகின்றனர்.
இந்த நிலையில் பொதுவாக பேய்ப்படம் என்றாலே அதில் பெண் பேய் தான் இருக்கும் என்பது கடந்த நூறாண்டு கால சினிமா வரலாறு. ஆனால் இந்த படத்தில் ஆர்யா தான் பேய் கேரக்டரில் நடித்து வருவதாக கூறப்படுகிறது
’அரண்மனை’ மற்றும் ’அரண்மனை 2’ ஆகிய இரண்டு திரைப்படங்களிலும் ஹன்சிகா பேய் கேரக்டரில் நடித்த நிலையில் இந்த படத்தில் ஆர்யா பேய் கேரக்டரில் நடித்து உள்ளதாக வெளி வந்திருக்கும் செய்தி ஆச்சரியத்தை அளித்துள்ளது.
முதல் முதலாக ஆர்யா பேய் கேரக்டரில் கலக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த திரைப்படம் விரைவில் திரையரங்குகள் திறந்தவுடன் வெளியாகும் என்று கூறப்படுகிறது