Advertisement

விஜய் கையில் உள்ள குட்டி பாப்பா யார்? இணையத்தில் வைரலான படம்

By: Nagaraj Thu, 10 Sept 2020 09:19:45 AM

விஜய் கையில் உள்ள குட்டி பாப்பா யார்? இணையத்தில் வைரலான படம்

விஜய் தன் கையில் தூக்கி வைத்துள்ள சின்ன பாப்பாவின் புகைப்படம் செம வைரலாகி வருகிறது.

விஜய் கையில் ஒரு குட்டி பாப்பாவை வைத்திருக்கும் வீடியோ வைரலானது. பலரும் யார் அந்த பாப்பா என கூகுளில் தேட, கடைசியில் அந்த பாப்பா ஒரு சீரியல் நடிகையாம். இதயத்தை திருடாதே சீரியலில் நாயகியாக நடித்து வரும் ஹிமா பிந்துவாம்.

ஹிமா பிந்து தனது இன்ஸ்டாவில் சில தினங்களுக்கு முன்பு நடிகர் விஜய்யின் புகைப்படம் ஒன்றை வெளியிட்டார். சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு அந்த புகைப்படம் எடுக்கப்பட்டிருக்கலாம். அவர் கையில் ஒரு குட்டி பாப்பா உள்ளது. ஹிமா அந்த புகைப்படத்தை பகிர்ந்து. “மிகவும் பொக்கிஷமான புகைப்படம் இது. விஜய் அங்கிள் என் தளபதி.” என்று பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் இப்போது வைரலாகியுள்ளது.

vijay,photography,viral,serial actress,master ,விஜய், புகைப்படம், வைரல், சீரியல் நடிகை, மாஸ்டர்

ஹிமா பிந்து இப்போது கலர்ஸ் தமிழ் சேனலில் வெளியாகும் இதயத்தை திருடாதே சீரியலில் நாயகியாக நடித்து வருகிறார். விஜய்யின் உறவினரா இவர் இல்லை, குடும்ப நண்பரா இல்லை சும்மா புகைப்படம் மட்டும் எடுத்துக் கொண்டாரா என்பது குறித்து தெரியவில்லை.

விஜய் நடித்துள்ள மாஸ்டர் படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில் அக்டோபர் மாதம் திரையரங்குகள் செயல்படத் தொடங்கினால் தீபாவளிக்கு கூட படம் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது.

Tags :
|
|