Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் யார் வெளியேறுவார்கள்: பட்டியலில் நிஷா, ஜித்தன் ரமேஷ்

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் யார் வெளியேறுவார்கள்: பட்டியலில் நிஷா, ஜித்தன் ரமேஷ்

By: Nagaraj Sat, 12 Dec 2020 3:15:08 PM

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் யார் வெளியேறுவார்கள்: பட்டியலில் நிஷா, ஜித்தன் ரமேஷ்

இந்த வாரம் யார் வெளியேறுவார்கள்... பிக்பாஸ் வீட்டில் சனி, ஞாயிறு வந்துவிட்டாலே எவிக்ஷன் ப்ராசஸ் பரபரப்பு ஆரம்பமாகிவிடும். இந்த வாரம் யார் எவிக்ட் ஆவார்கள் என பிக் பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களும் சரி வெளியே உள்ள பார்வையாளர்கள் சரி விவாதம் செய்ய தொடங்கி விடுவார்கள்

அந்த வகையில் நேற்று அர்ச்சனா, ரியோவிடம் இந்த வாரம் நிஷா எப்படியும் கேப்டன் டாஸ்க்கில் வெற்றி பெறுவார் என்று நினைத்தேன். ஆனால் ஏமாற்றிவிட்டார். அவர் தோல்வி அடைந்தது கூட எனக்கு பெரிதாக தெரியவில்லை. கொஞ்சம் முயற்சி கூட செய்யவில்லை. இந்த வாரம் நிஷா போய்விடுவாளோ என்று பயமாக இருக்கிறது என்று தெரிவித்தார்.

அர்ச்சனாவின் கணிப்பில் நிஷா வெளியேறும் போட்டியாளர் என்று தெரிகிறது. அதேபோல் வாக்குகளின் அடிப்படையில் வெளிவந்துள்ள தகவலின்படி நிஷா மற்றும் ரமேஷ் ஆகிய இருவர்தான் குறைவான வாக்குகள் பெற்று இருப்பதாக கூறப்படுகிறது. அதனை அடுத்து கேப்ரில்லா குறைவான வாக்குகளை பெற்றுள்ளார்.

archana,love group,nisha,ramesh,eviction ,
அர்ச்சனா, அன்பு குரூப், நிஷா, ரமேஷ், எவிக்சன்

இந்த நிலையில் கடந்த வாரம் கூண்டோடு கைலாசம் என்ற ஒரு வார்த்தையை கமல்ஹாசன் பயன்படுத்தியதால் இந்த வாரம் இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்டவர்கள் வெளியேற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது

இன்னும் நான்கு அல்லது ஐந்து வாரங்கள் மட்டுமே போட்டி இருக்கும் நிலையில் 12 பேர் வீட்டில் இருப்பதால் மொத்தமாக நான்கு அல்லது ஐந்து பேர்களை வெளியேற்றி விட்டு இனி வரும் வாரங்களில் ஒவ்வொரு வாரமும் ஒருவர் வெளியேற்றப்படலாம் என்ற ஐடியா பிக்பாஸ் நிர்வாகத்தினர்களுக்கு இருக்கிறதாம்.

எனவே அன்பு குரூப்பில் உள்ள அர்ச்சனா தவிர மீதி உள்ள அனைவரும் வெளியேற்றப்படவும் வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

Tags :
|
|