Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • இந்த வாரம் யார் வெளியே செல்வார்கள்? ஆஜித்திடம் கேள்வி எழுப்பிய கமல்!

இந்த வாரம் யார் வெளியே செல்வார்கள்? ஆஜித்திடம் கேள்வி எழுப்பிய கமல்!

By: Monisha Sun, 01 Nov 2020 2:42:04 PM

இந்த வாரம் யார் வெளியே செல்வார்கள்? ஆஜித்திடம் கேள்வி எழுப்பிய கமல்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நாமினேஷன் செய்யப்பட்ட 11 பேர்களில் சனம், பாலாஜி, ரியோ, சோம்சேகர் மற்றும் ஜித்தன் ரமேஷ் ஆகியோர் நேற்று காப்பாற்றப்பட்ட நிலையில் இன்று மீதமுள்ள 6 பேர்களில் ஒருவர் இன்று வெளியேற்றப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்று முன் வெளியான புரமோ வீடியோவில் 'ஆருடம் கூறும் ஆஜித் அவர்களே, இந்த வாரம் யார் வெளியே செல்வார்கள் என்று கூறுங்கள் என்று கமல் கேட்க அதற்கு ஆஜித் அமைதியாக உள்ளார்.

big boss show,nomination,ajith,velmurugan,kamal haasan ,பிக்பாஸ் நிகழ்ச்சி,நாமினேஷன்,ஆஜித்,வேல்முருகன்,கமலஹாசன்

அதன் பின்னர் இதே கேள்வியை வேல்முருகனிடம் கமல் கேட்கும்போது, நான் தான் வெளியே போக வாய்ப்பு உள்ளதாக அவர் தெரிவித்தார். இதனை அடுத்து நீங்கள் இப்போது ஜோசியர் ஆகி விட்டீர்களா? என்று நகைச்சுவையுடன் கமென்ட் அடித்தார் கமலஹாசன்.

இந்த நிலையில் இன்றைய புரமோவின் கடைசி ஷாட்டில் வேல்முருகனை அனைவரும் வழி அனுப்புவது போன்ற ஒரு காட்சி இருப்பதால் வேல்முருகன் தான் இன்று வெளியேறினார் என்பது உறுதியாகியுள்ளது. வேல்முருகனின் வெளியேற்றத்திற்கு பின்னர் பிக்பாஸ் வீட்டில் என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Tags :
|