Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • லைகா நிறுவனத்திற்கு தொகையை ஏன் இன்னும் செலுத்தவில்லை? .. விஷாலுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

லைகா நிறுவனத்திற்கு தொகையை ஏன் இன்னும் செலுத்தவில்லை? .. விஷாலுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

By: vaithegi Thu, 12 Oct 2023 3:47:03 PM

லைகா நிறுவனத்திற்கு தொகையை ஏன் இன்னும் செலுத்தவில்லை? .. விஷாலுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

நடிகர் விஷாலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி ... நடிகர் விஷால், தனது 'விஷால் பிலிம் பேக்டரி' நிறுவனத்திற்காக சினிமா பைனான்சியர் அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடமிருந்து ரூ.21 கோடியே 29 லட்சம் கடனாக பெற்றார். இதையடுத்து இந்த கடனை லைகா நிறுவனம் திரும்ப செலுத்தியது. ஆனால் லைகா நிறுவனத்துக்கு நடிகர் விஷால் அக்கடனை செலுத்தவில்லை.

அதனால் அந்த கடன் தொகையை செலுத்தும்வரை விஷாலில் படங்கள் அனைத்தின் உரிமைகளையும் லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டும் என ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளது. இந்த ஒப்பந்தத்தை மீறி, வீரமே வாகை சூடும் என்ற படத்தை வெளியிடுவதாக விஷால் நிறுவனத்திற்கு எதிராக லைகா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடர்ந்தது.

high court,leica co ,உயர்நீதிமன்றம் , லைகா நிறுவனம்


தங்களுக்கு தர வேண்டிய தொகையை செலுத்த உத்தரவிடக் கோரி லைகா தொடர்ந்த வழக்கை இன்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் லைகாவுக்கு ஏன் இன்னும் பணம் செலுத்தவில்லை என்கிற நீதிபதியின் கேள்விக்கு, பணம் செலுத்த தயாராக இருந்தாலும், லைகா பேச்சுவார்த்தைக்கு வருவதில்லை என்று விஷால் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 2021ம் ஆண்டில் ரூ.80 கோடிக்கு விஷால் பணப்பரிவர்த்தனை செய்து உள்ளார்.

வேண்டுமென்றே எங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை தராமல் உள்ளார் என லைகா தனது தரப்பு வாதத்தை முன்வைத்தது. இதனை கேட்ட விஷால் தரப்பு, பணத்தை செலுத்த தயாராக உள்ளோம். லைகா தரப்பில் பேச்சுவார்த்தைக்கு முன்வரவில்லை எனக் கூறியது. இதனை கேட்ட நீதிபதி லைகா நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய தொகையை ஏன் இன்னும் செலுத்தவில்லை? என கேள்வி எழுப்பினார். தொடர்ந்து வழக்கின் விசாரணையை நவம்பர் முதல் தேதிக்கு ஒத்திவைத்தது.

Tags :