- வீடு›
- பொழுதுபோக்கு›
- மனோஜ் பாரதிராஜா இயக்கும் படத்தில் நடிகர் சிம்பு நடிப்பாரா?
மனோஜ் பாரதிராஜா இயக்கும் படத்தில் நடிகர் சிம்பு நடிப்பாரா?
By: Nagaraj Sun, 08 Nov 2020 11:19:18 PM
இயக்குநர் பாரதிராஜாவின் மகனான நடிகர் மனோஜ் பாரதிராஜா இப்போது ஒரு புதிய படத்தை இயக்கப் போகிறார். இதில் சிம்புவை நடிக்க வைக்க அவர் விரும்புகிறார்.
இந்தப் படத்தை லிப்ரா புரொடெக்சன்ஸ் நிறுவனத்தின் சார்பில் ரவீந்திரன் சந்திரசேகரன் தயாரிக்கவிருக்கிறார். மனோஜ் பாரதிராஜா கடந்த சில ஆண்டுகளாக அளித்த பேட்டியில் தான் 'சிகப்பு ரோஜாக்கள்' படத்தின் இரண்டாம் பாகத்தை எழுதி வைத்திருப்பதாகவும், அதையே தன்னுடைய முதல் படமாக இயக்கப் போவதாகவும் சொல்லியிருந்தார்.
"ஒருவேளை அந்தப் படம்தான் இதுவா..?" என்று விசாரித்தபோது அதனை முற்றிலும்
மறுத்தார் மனோஜ் பாரதிராஜா. "லிப்ரா புரொடெக்சன்ஸ் நிறுவனத்திற்காக நான்
செய்யப் போவது வேறொரு கதை. முழுதாக ஸ்கிரிப்ட்டை முடித்துவிட்டேன். எல்லாம்
தயாராக இருக்கிறது. இதில் சிம்பு நடித்தால் நன்றாக இருக்கும் என்று
நினைக்கிறேன்.
நான் இப்போது அடுத்து வரும் நாட்களில் 'மாநாடு'
படத்தில் சிம்புவுடன் நடிக்கவிருக்கிறேன். அந்த நேரத்தில் அவரிடத்தில்
இந்தக் கதையைச் சொல்லி ஓகே வாங்கலாம் என்று நினைத்துள்ளேன்.. நிச்சயமாக
சிம்பு என் படத்தில் நடிப்பார் என்று நம்புகிறேன்.." என்றார் மனோஜ்
பாரதிராஜா.