Advertisement

பிரபாஸ்- ராணா கூட்டணி மீண்டும் இணைகிறதா? ரசிகர்கள் எதிர்பார்ப்பு

By: Nagaraj Tue, 15 Dec 2020 10:40:24 PM

பிரபாஸ்- ராணா கூட்டணி மீண்டும் இணைகிறதா? ரசிகர்கள் எதிர்பார்ப்பு

மீண்டும் இணைகிறதா அதிரடி கூட்டணி... பாகுபலி என்ற பிரம்மாண்ட திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக உலகம் முழுவதும் பிரபலமானவர் நடிகர் பிரபாஸ். தற்போது இவர் ஆதி புருஷ் மற்றும் ராதே ஷியாம் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகின்றார்.

இதனை தொடர்ந்து பிரபாஸ் கேஜிஎப் பட இயக்குனரான பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகி இருக்கின்ற புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். கேஜிஎஃப் படத்தை தயாரித்த ஹொம்பாளே ஃபிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் தான் இந்த படத்தையும் தயாரிக்கிறது.

இந்த படத்திற்கு சலார் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் சலார் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பையும், எதிர்பார்ப்பையும் பெற்றது. பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த புதிய படத்தில் நடிகர் பிரபாஸுக்கு வில்லனாக ராணா டகுபதியை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

bhagwati,coalition,prabhas,rana tagupathi,negotiation ,பாகுபலி, கூட்டணி, பிரபாஸ், ராணா டகுபதி, பேச்சுவார்த்தை

முன்னதாக பாகுபலி திரைப்படத்தில் ராணா Vs பிரபாஸ் காம்பினேஷன் மிக அருமையாக செட் ஆகியது. இது பெரும் வெற்றியைப் பெற்றது. எனவே அதே கூட்டணி இந்த படத்திலும் தொடரும் என்பது ரசிகர்களுக்கு மிகவும் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. விரைவில் வெளியாகவுள்ள இந்த அறிவிப்பிற்காக பாகுபலி படத்தின் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துக் கிடக்கின்றனர்.

Tags :