- வீடு›
- பொழுதுபோக்கு›
- ஜெயிலர் படத்தை மெகா ஹிட் அடிக்க செய்வாரா ரஜினி?
ஜெயிலர் படத்தை மெகா ஹிட் அடிக்க செய்வாரா ரஜினி?
By: Nagaraj Fri, 14 Oct 2022 10:37:44 PM
சென்னை : ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இதற்கு முன் சூப்பர் ஸ்டார் படம் என்றாலே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருக்கும். மேலும் படத்தின் அறிவிப்பு வெளியான நாளிலிருந்தே ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருப்பார்கள்.
ஆனால் கடந்த சில நாட்களாக ரஜினியின் படத்திற்கான எதிர்பார்ப்பு பெரிதாக இல்லை. ஏனென்றால் இதற்கு முன்பு ரஜினிகாந்த் நடித்த படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தன. அண்ணாத்த படத்தின் சரிவு ரஜினியை ரொம்பவே யோசிக்க வைத்துள்ளதாம்.
இதனால் ரஜினி ஜெயிலர் பற்றி யாரும் அதிகம் பேசுவதில்லை. மேலும் படம் குறித்த அப்டேட் எதுவும் இல்லை. ரஜினி முக்கிய முடிவு எடுத்துள்ளார். இனிமேல் மக்கள் விரும்பும் காட்சிகளை படத்தில் வைக்க ரஜினிகாந்த் திட்டமிட்டுள்ளார்.
ஷூட்டிங் லொகேஷனில் இருக்கும் அனைவரிடமும் நன்றாக இருக்கிறதா என்று ரஜினி
அடிக்கடி கேட்டு வருகிறார். கதையில் தலையிடாத ரஜினி இப்போது ஒவ்வொரு
விஷயத்தையும் பலமுறை பார்த்து செய்து வருகிறார்.
ஏனென்றால்
ரஜினியின் மார்க்கெட் தொடர்ந்து சரிந்து வருகிறது. மேலும் அவரது சம்பளம்
படம் படம் குறைந்து கொண்டே வருகிறது. ஒருவேளை ஜெயிலர் படத்திற்கு கலவையான
விமர்சனங்கள் வந்தால், தனது திரையுலக வாழ்க்கையே இல்லாமல் போய்விடுமோ என்ற
பயத்தில் ரஜினி இப்படி செய்கிறார்.
இதனால் ஜெயிலர் அணிக்கு தற்போது
அதிக அழுத்தம் ஏற்பட்டுள்ளது. மேலும் சூப்பர் ஸ்டாரின் வேகத்தைப்
பார்த்தால் நிச்சயம் ஜெயிலரை பிளாக்பஸ்டர் ஹிட் ஆக்குவார் என கோலிவுட்
வட்டாரத்தில் பேசப்படுகிறது.