Advertisement

சூப்பர் ஹீரோயின் படத்தில் டாப்ஸி தேர்வு பெறுவாரா?

By: Monisha Mon, 01 June 2020 4:37:16 PM

சூப்பர் ஹீரோயின் படத்தில் டாப்ஸி தேர்வு பெறுவாரா?

ஹாலிவுட்டில் ஏராளமான சூப்பர் ஹீரோ திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. அவை உலகம் முழுவதும் கோடிக்கணக்கில் வசூலை வாரி குவித்துள்ளது. இந்த நிலையில் ஹாலிவுட்டின் பிரபல தயாரிப்பு நிறுவனமான டிஸ்னி நிறுவனம் தற்போது சூப்பர் ஹீரோயின் திரைப்படம் ஒன்றை எடுக்க திட்டமிட்டுள்ளது.

இந்த சூப்பர் ஹீரோயின் திரைப்படத்திற்காக உலகின் முன்னணி நடிகைகளுக்கு டிஸ்னி அழைப்பு விடுத்துள்ளதாகவும் இந்தியாவில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்ட ஒரே நடிகை டாப்சி என்றும் கூறப்படுகிறது.

hollywood,superheroine,taapsee,disney company ,ஹாலிவுட்,சூப்பர் ஹீரோயின்,டாப்ஸி,டிஸ்னி நிறுவனம்

தனுஷ் நடித்த ’ஆடுகளம்’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை டாப்ஸி, அதன்பின் தமிழ் தெலுங்கு மற்றும் இந்தி திரைப்படங்களில் நடித்து இந்திய அளவில் முன்னணி நடிகையாக உள்ளார். இவர் சமீபத்தில் நடித்த ’பிங்க்’ உட்பட பல திரைப்படங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்த நிலையில் டிஸ்னி தயாரிக்க இருக்கும் சூப்பர் ஹீரோயின் திரைப்படம் இந்தியாவை பின்னணியைக் கொண்ட கதையம்சம் கொண்டது என்பதால் டாப்ஸி தேர்வு செய்ய அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Tags :