Advertisement

மீண்டும் விடாமுயற்சி திரைப்படம் தள்ளிபோகிறதா?

By: vaithegi Sun, 01 Oct 2023 4:54:11 PM

மீண்டும் விடாமுயற்சி திரைப்படம் தள்ளிபோகிறதா?

‘விடாமுயற்சி’ படம் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகவுள்ள இந்த திரைப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பே இந்த திரைப்படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிவிட்டது.

இதையடுத்து மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இருக்கும் இந்த திரைப்படத்திற்கான அறிவிப்பு மட்டுமே வெளியாகி இன்னும் படப்பிடிப்பு கூட தொடங்காமல் இருப்பது அஜித் ரசிகர்களுக்கு மிகவும் வேதனையை கொடுத்துள்ளது. மற்ற நடிகர்களின் படங்களின் அப்டேட் வெளியாகும் போதெல்லாம் அவர்கள் லைக்கா நிறுவனத்திடம் விடாமுயற்சி அப்டேட் கேட்டுக்கொண்டே வருகிறார்கள். மேலும், அடிக்கடி படத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் படப்பிடிப்பு தொடங்கும் தேதி குறித்த தகவல் பரவி வருகிறது.

ஆனால்,இந்த படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்குகிறது படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்ற அறிவிப்பு மட்டும் வெளியாகவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 2-ஆம் தேதி துபாயில் தொடங்கப்பட உள்ளதாக தகவல் பரவியது. அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை என்றாலும் கூட நம்பத்தக்க சினிமா வட்டாரத்தில் இந்த தகவல் கூறப்பட்ட காரணத்தால் அதனை கேட்ட அஜித் ரசிகர்கள் மிகவும் உற்சாகத்துடன் இருந்தார்கள்.

persistence,fig ,விடாமுயற்சி ,படம்

இந்நிலையில் தற்போது அதனை தொடர்ந்து மீண்டும் விடாமுயற்சி திரைப்படம் தள்ளிச் செல்ல வாய்ப்புள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது ரசிகர்களை மீண்டும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சில காரணங்களால் படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 4-ஆம் தேதி படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கப்படவுள்ளதாம்.

அக்டோபர் 2-ஆம் தேதி தொடங்கி விடாமுயற்சி படத்தை விறு விறுவென எடுக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அடுத்தாண்டு கண்டிப்பாக படம் வெளியாகிவிடும். இதன் இடையில், அப்டேட்டிற்காக காத்திருக்கும் அஜித் ரசிகர்களுக்கு இனிமேல் தொடர்ச்சியாக அப்டேட் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :