Advertisement

தீபாவளிக்கு மாஸ்டர் திரைப்படத்தின் டீசர் வெளியாகுமா?

By: Monisha Wed, 11 Nov 2020 5:00:18 PM

தீபாவளிக்கு மாஸ்டர் திரைப்படத்தின் டீசர் வெளியாகுமா?

கொரோனா ஊரடங்கிற்கு பின் திரைப்பட படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக ஒருபக்கம் நடைபெற்று வரும் நிலையில், நேற்று முதல் திரையரங்குகளும் திறந்து விட்டன. வரும் தீபாவளி முதல், களத்தில் சந்திப்போம், பிஸ்கோத்து உள்பட ஒரு சில புதிய திரைப்படங்கள் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது.

அதுமட்டுமின்றி ஓடிடியில் சூரியாவின் 'சூரரைப்போற்று' மற்றும் ஆர்ஜே பாலாஜியின் 'மூக்குத்தி அம்மன்' போன்ற படங்களும் வெளியாக உள்ளதால் இந்த தீபாவளி சினிமா ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தனுஷ் நடித்த 'ஜகமே தந்திரம்' படத்தின் ஒரு பாடலும் சிம்பு நடித்த 'ஈஸ்வரன்' படத்தின் டீசரும் பாவளிக்கு வெளியாக உள்ளது;

diwali,master,movie,teaser,fans ,தீபாவளி,மாஸ்டர்,திரைப்படம்,டீசர்,ரசிகர்கள்

இந்த நிலையில் தளபதி விஜய்யின் 'மாஸ்டர்' திரைப்படத்தின் டீசர் தீபாவளிக்கு வெளிவர வாய்ப்பு இருப்பதாக சமூகவலைதளங்களில் விஜய் ரசிகர்கள் செய்திகளை பகிர்ந்து வந்தனர். ஆனால் இது குறித்து படக்குழுவினர் இன்னும் அதிக அபூர்வமான அறிவிப்பை வெளியிடவில்லை. தீபாவளிக்கு இன்னும் மூன்று நாட்களே இருக்கும் நிலையில் மாஸ்டர் டீசர் குறித்த எந்தவித அறிவிப்பு வெளிவரவில்லை.

மாஸ்டர்’ டீசர் குறித்து படக்குழுவினர் அமைதியாக இருப்பதைப் பார்க்கும்போது விஜய் ரசிகர்களுக்கு இந்த தீபாவளிக்கு ஏமாற்றமே காத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே மாஸ்டர் படத்தின் ரிலீஸ் தேதியை முடிவு செய்யாமல் டீசர் மற்றும் டிரைலர் ரிலீஸ் தேதியை அறிவிக்க வாய்ப்பு இல்லை என்று லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார்.

Tags :
|
|
|
|