Advertisement

வாரிசு படத்தின் டிரெய்லர் தெறிக்க விடுமா? ரசிகர்கள் எதிர்பார்ப்பு

By: Nagaraj Tue, 03 Jan 2023 2:15:17 PM

வாரிசு படத்தின் டிரெய்லர் தெறிக்க விடுமா? ரசிகர்கள் எதிர்பார்ப்பு

சென்னை: ரசிகர்களுக்கு தீனி கொடுப்பதை போல் வாரிசு, துணிவு படத்தின் அப்டேட்டுகள் நாள் தோறும் ஓயாமல் வந்து கொண்டே இருக்கிறது. துணிவு படத்தின் ஒரு பாடல் வந்தால், வாரிசு படத்தின் ஒரு பாடல் வருகிறது. வாரிசு படத்தின் ஒரு பாடல் வந்தால் துணிவு படத்தின் மற்றொரு பாடல் வருகிறது.

இப்படி மாறி மாறி வெளியிட்டுக் கொண்டே இருக்கிறார்கள். வாரிசு படத்தின் ஆடியோ லான்ச் முடிந்து சில நாட்களுக்கு அதன் டாக் இருந்து கொண்டே இருந்தது. நாங்களும் அப்டேட் விடுவோம் என்று துணிவு, களத்தில் இறங்கி டிசம்பர் 31 ஆம் தேதி ட்ரெய்லரை வெளியிட்டனர்.

அஜித் ரசிகர்கள் புத்தாண்டை குதூகலமாக கொண்டாடித் தீர்த்தார்கள். அதேபோல், வாரிசு ஆடியோ லான்ச் நிகழ்வும் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி விஜய் ரசிகர்களையும் குஷியில் ஆழ்த்தியது. ஆடியோ லாஞ்சில் நிகழ்ந்த பல விஷயங்கள் குறித்த விவாதங்களும் ஒருபுறம் ஓடிக் கொண்டிருக்கிறது.

இப்படி இருக்கையில், வாரிசு தரப்பில் இருந்து புதிதாக ஒரு தகவல் கசிந்து இருக்கிறது. வாரிசு ட்ரெய்லரை எப்படி கட் செய்வது என்பது குறித்து பெரிய டிஸ்கஷனே படக்குழு மத்தியில் ஓடிக் கொண்டிருக்கிறது. துணிவு ட்ரெய்லரில் ஸ்டண்டு சீன்கள் பெரிய அளவில் இருந்ததும், சில பஞ்ச்கள் கொஞ்சம் சீண்டும் வகையில் இருந்ததாகவும் ஒரு பேச்சு உள்ளது.

social media,crew,trailer,splash,jet speed ,சோஷியல் மீடியா, படக்குழுவினர், ட்ரெய்லர், தெறிக்க விடுமா, ஜெட் வேகம்

அதனால் அதற்கு பதிலடி கொடுக்க வேண்டும் அதற்கு ஏற்ப ட்ரெய்லரை ரெடி பண்ண வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளதாம். அதனால், ஏற்கனவே எடிட் செய்யப்பட்ட வாரிசு ட்ரெய்லரில் புதிய மாற்றங்களை செய்து, ரசிகர்களை குஷிப் படுத்தும் விதமாகவும் துணிவு ட்ரெய்லருக்கு கவுண்ட்டர் கொடுக்கும் வகையிலும் வெளியிட முழுவீச்சில் வேலை நடந்து கொண்டிருக்கிறதாம்.


எப்படியோ இரு படங்களின் தரப்பினரும் புரமோஷனை ஜெட் வேகத்தில் செய்து கொண்டிருக்கிறார்கள். படக்குழுவினருக்கு இணையாக ரசிகர்களும் சோஷியல் மீடியாவில் கத்தியை சுழட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

Tags :
|
|