Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தனக்கு வாய்ப்பு கேட்ட யோகி பாபு, பதில் கொடுத்த கேப்டன் தோனி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தனக்கு வாய்ப்பு கேட்ட யோகி பாபு, பதில் கொடுத்த கேப்டன் தோனி

By: vaithegi Tue, 11 July 2023 2:06:06 PM

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தனக்கு வாய்ப்பு கேட்ட யோகி பாபு,  பதில் கொடுத்த கேப்டன்  தோனி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, தனது படத்தயாரிப்பு நிறுவனத்தின் முதல் திரைப்படமாக எல்.ஜி.எம் என்ற தமிழ் படத்தை தயாரித்து உள்ளார். இதையடுத்து இதில் ஹரீஷ் கல்யாண், இவானா, நதியா மற்றும் யோகி பாபு ஆகியோர் நடித்து உள்ளனர்.

இதனை அடுத்து இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு நிகழ்வு சென்னையில் நேற்று நடைபெற்றது.சென்னை, லீலா பேலஸில் நடைபெற்ற இந்நிகழ்வில் தோனி, அவரது மனைவி சாக்‌ஷி தோனி மற்றும் படக்குழுவினர் பங்கேற்றனர்.

dhoni,yogi babu ,தோனி,யோகி பாபு

இதில் பேசிய யோகி பாபு, படத்தை குறித்து பேசினார். தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தனக்கு வாய்ப்பு வழங்குமாறு தோனியிடம் வேடிக்கையாக கேட்டார். அவர் கிரிக்கெட் விளையாட்டு பிரியர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதற்கு தோனி “ராயுடு ஓய்வு பெற்றுவிட்டார். அதனால் சிஎஸ்கே அணியில் உங்களுக்கான இடம் உள்ளது. நான் அணி நிர்வாகத்திடம் பேசுகிறேன். ஆனால், நீங்கள் படங்களில் மும்முரமாக நடித்து வருகிறீர்கள். நான் சொல்கிறேன். நீங்கள் கன்சிஸ்டியுடன் விளையாட வேண்டும். உங்களை காயப்படுத்தும் வகையில் பந்து வீச்சாளர்கள் பந்தை வேகமாக வீசுவார்கள்” என அவர் பதில் தெரிவித்திருந்தார்.

Tags :
|