Advertisement

யோகி பாபு நடித்துள்ள திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு

By: vaithegi Thu, 26 Jan 2023 6:05:37 PM

யோகி பாபு நடித்துள்ள திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு

'பொம்மை நாயகி' டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது .... இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் யாழி பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் 'பொம்மை நாயகி'. இதையடுத்து இயக்குனர் ஷான் எழுதி, இயக்கியுள்ள இப்படத்தில் முன்னணி காமெடி நடிகர் யோகி பாபு கதாநாயகனாக நடித்துள்ளார்.

கடலூர் கடற்கரையை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தில் குழந்தை நட்சத்திரம் ஸ்ரீமதி நடித்துள்ளார். 1 தந்தை மற்றும் மகளின் வாழ்க்கையை சமூகம் மற்றும் அரசியல் எவ்வாறு பாதிக்கிறது என்பது பற்றிய படமாக 'பொம்மை நாயகி' உருவாகியுள்ளது.

trailer,yogi babu ,டிரைலர் ,யோகி பாபு

மேலும் இப்படத்தில் 'வட சென்னை', 'கபாலி' போன்ற படங்களின் மூலம் பிரபலமான சுபத்ரா, 'மெட்ராஸ்' புகழ் ஹரி கிருஷ்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு கே எஸ் சுந்தர மூர்த்தி இசையமைத்துள்ளார். அதிசயராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது. இந்த டிரைலர் இணையத்தில் வைரலாகி வருகிறது. 'பொம்மை நாயகி' திரைப்படம் வருகிற பிப்ரவரி 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Tags :