- வீடு›
- பொழுதுபோக்கு›
- யோகி பாபு நடித்துள்ள குய்கோ படத்தின் டிரைலர் வெளியீடு
யோகி பாபு நடித்துள்ள குய்கோ படத்தின் டிரைலர் வெளியீடு
By: Nagaraj Wed, 22 Nov 2023 9:51:09 PM
சென்னை: நடிகர்கள் வித்தார்த், யோகி பாபு நடித்துள்ள குய்கோ படத்தின் டிரைலரைப் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ஆண்டவன் கட்டளை திரைப்படத்தின் கதை, திரைக்கதாசிரியரான டி.அருள் செழியன் இயக்குநராக அறிமுகமாகும் படம் குய்கோ.
சவுதியில் இருந்து சொந்த ஊர் திரும்பும் நாயகன் சந்திக்கும் சம்பவங்கள் என நகைச்சுவை பாணி திரைப்படமாக உருவாகியிருக்கிறது இப்படம்.
நடிகர்கள் வித்தார்த், யோகி பாபு நடித்துள்ள இப்படத்தை ஏஎஸ்டி நிறுவனம் தயாரித்துள்ளது. ஆந்தோனி தாசன், கேவின் மிராண்டா இசையமைத்துள்ளனர். இந்நிலையில், இப்படத்தின் டிரைலரைப் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
Tags :
vidharth |
movie |
trailer |
comedy |