Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • எப்போதும் தாலியை கழற்றி விட்டு நடிக்க முடியாது... சின்னத்திரை நடிகை உறுதி

எப்போதும் தாலியை கழற்றி விட்டு நடிக்க முடியாது... சின்னத்திரை நடிகை உறுதி

By: Nagaraj Sat, 22 Oct 2022 11:04:32 AM

எப்போதும் தாலியை கழற்றி விட்டு நடிக்க முடியாது... சின்னத்திரை நடிகை உறுதி

சென்னை: தாலியை கழற்றி விட்டு நடிக்க மாட்டேன்... எந்த சமயத்திலும் தாலி கழட்டி வச்சிட்டு நடிக்க மாட்டேன் என்று சின்னத்திரை நடிகை வித்யா மோகன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அப்படிதான் நடிக்க வேண்டும் என்றால் அந்த ப்ராஜக்ட்டே தேவையில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

வள்ளி நெடுந்தொடர் மூலம் அறிமுகமாகி, ரசிகர்களை தன் வசமாக்கிக் கொண்டவர் வித்யா மோகன். மலையாள வரவான இவர் ஒரு சில தமிழ் படங்களில் நடித்தார். பின்பு சின்னத்திரை பக்கம் சென்றார். சில ஆண்டுகளுக்கு முன்பு ஒளிப்பரப்பான வள்ளி தொடரில் பார்வையற்ற பெண், ஆண் வேடம் என வித்தியாசமான கெட்-அப்களில் நடித்து கைத்தட்டல்களை அள்ளினார். தற்போது அபியும் நானும் சீரியலில் மீனா என்ற ரோலில் நடித்து வருகிறார். இந்த சீரியலும் டி.ஆர்.பியில் கலக்கி கொண்டிருக்கிறது.

small screen actresses,vidya,bithali,thali,will not act ,சின்னத்திரை நடிகை, வித்யா, பதில், தாலி, நடிக்க மாட்டேன்

தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு மேல் சின்னத்திரையில் வித்யா லீட் ரோலில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவரின் கணவர் வினு மோகனும் நடிகர் தான். கணவருடன் இருக்கும் புகைப்படங்களை வித்யா இன்ஸ்டாவில் அதிகம் பகிர்வார்.

இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் வித்யா தாலியை கழட்டி வைத்துவிட்டு நடிக்க மாட்டேன் என கூறியுள்ளார். அப்படி ஒரு சந்தர்ப்பம் வந்தால் அந்த புராஜெக்ட் வேண்டாம் என கூறிவிடுவேன் என தெரிவித்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் பலரும் வித்யாவின் பதிலை ரசித்து சூப்பர் என கூறியுள்ளனர்.

Tags :
|
|