Advertisement

மைக்கை கழற்றி வைக்கிறீர்கள் அர்ச்சனா; எச்சரிக்கை விடுத்த கமல்

By: Nagaraj Sun, 13 Dec 2020 8:37:53 PM

மைக்கை கழற்றி வைக்கிறீர்கள் அர்ச்சனா; எச்சரிக்கை விடுத்த கமல்

மைக்கை கழற்றி வைத்து விடுகிறீர்கள் அர்ச்சனா. இப்படி செய்தவர்கள் வெளியேற்றி உள்ளோம் என்று கமல் எச்சரிக்கை விடுத்துள்ளார். பிக் பாஸ் இன்றைய நிகழ்ச்சிக்கான இரண்டாவது ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி கடந்த மூன்று சீசன்கள் போல் இல்லாமல் எரிச்சலூட்டும் படியாகவே உள்ளது ரசிகர்களின் கருத்து. இதனால் தான் டிப்ஸ் என்ற பெயரில் கமல் வாரந்தோறும் வந்து எச்சரித்து விட்டு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார் . ஆனால் 70 நாட்கள் ஆகியும் மாற்றம் ஏதுமில்லை என்பதால் தான் இந்த வாரம் நேற்று ஜித்தன் ரமேஷ் வெளியேற்றப்பட்டார். இன்று ஒருவர் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட உள்ளார்.

promo,anita,namuttu laughter,archana,irregular ,ப்ரோமோ, அனிதா, நமுட்டு சிரிப்பு, அர்ச்சனா, விதிமீறல்

இந்நிலையில் இன்றைய நிகழ்ச்சிக்கான முதல் ப்ரோமோவில், கமல் மைக் எல்லாரும் சரியா போட்டிருக்கீங்களா என்று கேட்கிறார். அதற்கு அர்ச்சனா வழக்கம் போல யெஸ் .சார், என்று சொல்ல, அர்ச்சனா நீங்க மட்டும் மைக் கழட்டி வைப்பது விதிமீறலா இருக்கு.

சோம், நிஷா மற்றும் ஷிவானி கூட பேசும் போது கூட மைக் கழட்டி வச்சிடீங்க. இப்படி பண்ணவங்கள பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றுன கதைலாம் நடந்துருக்கு என்று சொல்லும் படியாக ப்ரோமோ முடிகிறது. இதை கேட்டு அனிதா நமுட்டு சிரிப்பு சிரிக்கிறார்.

Tags :
|
|