Advertisement

ரசிகர்களின் கேள்வியால் ஆவேசமான யுவன்ஷங்கரின் மனைவி!

By: Monisha Thu, 28 May 2020 3:49:20 PM

ரசிகர்களின் கேள்வியால் ஆவேசமான யுவன்ஷங்கரின் மனைவி!

தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் யுவன்ஷங்கர் ராஜா. இவர் கடந்த 2014ஆம் ஆண்டு இஸ்லாம் மதத்திற்கு மாறினார். பின்னர் 2015ஆம் ஆண்டு ஷாஃப்ரூன் நிஷா என்ற இஸ்லாம் பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

சமீபத்தில் ரம்ஜான் கொண்டாடப்பட்ட நிலையில் யுவனின் மனைவி ஷாஃப்ரூன் நிஷா தனது சமூக வலைத்தளத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்தார். ரசிகர்களின் பெரும்பாலான கேள்விகள் யுவனை ஏன் இஸ்லாம் மதத்திற்கு மாற்றினீர்கள் என்றும், கடவுள் பக்தி மிகுந்த இளையராஜாவின் மகனை மதமாற்றிவிட்டீர்கள் என்றும், நீங்கள் ஏன் இந்துவாக மாறியிருக்க கூடாது என்ற ரீதியில் இருந்தன.

yuvan shankar raja,ramzan festival,islam,shafroon nisha,fans ,யுவன்ஷங்கர் ராஜா,ரம்ஜான் பண்டிகை,இஸ்லாம்,ஷாஃப்ரூன் நிஷா,ரசிகர்கள்

இந்த கேள்விகளுக்கு ஷாஃப்ரூன் நிஷா பொறுமையாக பதிலளித்தார். யுவன் திருமணத்திற்கு முன்னரே இஸ்லாம் மதத்தை தேர்வு செய்துவிட்டார் என்றும் இஸ்லாமை அவர் பின்பற்ற தொடங்கிய பின்னர் தான் எனக்கு அவரைத் தெரியும் என்றும், அவருடைய மிகப்பெரிய கேள்விகளுக்கான விடைகள் குரானில் கிடைத்திருக்கலாம், அதனால் அவர் இஸ்லாம் மதத்திற்கு மாறியிருக்கலாம் என்றும் பதிலளித்தார். மேலும் மதத்தை தாண்டி எங்கள் இருவருக்கும் ஒரே எண்ண அலைவரிசை இருப்பதாகவும், நாங்கள் ஆரோக்கியமான உரையாடல் மூலமும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டுள்ளோம் என்றும் கூறியுள்ளார்.

இந்த விளக்கத்திற்கு பின்னரும் மீண்டும் மதம் மாறியது குறித்த கேள்விகள் தொடரவே ஒரு கட்டத்தில் சற்று ஆவேசமான ஷாஃப்ரூன் நிஷா ’மக்கள் எப்படி இப்படி முட்டாளாக இருக்கிறார்கள் என்று கூட எனக்கு அதிர்ச்சியாக உள்ளது என்றும், யார் வேண்டுமானாலும் அவர்களது வெகுளியான மனதில் விஷத்தை கலக்க முடியும் என்றும், எப்படியோ யுவனின் மனதில் விஷத்தைக் கலப்பதில் வெற்றி பெற்று விட்டீர்கள்" என்றும் பதிலளித்ததார்.

Tags :
|