Advertisement

  • வீடு
  • வாழ்வியல் முறை
  • பாத்ரூம் டைல்ஸில் படிந்திருக்கும் உப்பு கறையை 10 நிமிடத்தில் மறைய 1 ரூபாய் செலவழித்தால் போதும்

பாத்ரூம் டைல்ஸில் படிந்திருக்கும் உப்பு கறையை 10 நிமிடத்தில் மறைய 1 ரூபாய் செலவழித்தால் போதும்

By: vaithegi Thu, 03 Aug 2023 3:43:01 PM

பாத்ரூம் டைல்ஸில் படிந்திருக்கும் உப்பு கறையை 10 நிமிடத்தில் மறைய 1 ரூபாய் செலவழித்தால் போதும்

வீட்டை சுத்தமாக வைத்திருப்பதும் வீட்டை சுத்தம் செய்வதும் பெரிய வேலை தான் என்றாலும் கூட, இந்த பாத்ரூமை சுத்தம் செய்வது அதை விட மிகப்பெரிய வேலை என்றே சொல்லலாம்.இந்த பாத்ரூமை பொருத்த வரையில் தினமும் சுத்தம் செய்ய வேண்டும். அப்படி செய்தாலும் கூட அதில் இருக்கும் கறைகள் அனைத்தும் முழுவதுமாக நீங்கி விடாது.

அதிலும் இன்று பல இடங்களில் உப்பு தண்ணீர் தான் பயன்பாட்டில் உள்ளது. இந்த உப்பு தண்ணீர் வரும் இடங்களில் உள்ள பாத்ரூம் டைல்ஸ் பீங்கான் பைக் போன்றவை எல்லாம் என்ன தான் நீங்கள் சுத்தம் செய்தாலும் அதில் கறைகள் பிடித்துக் கொண்டு விடாமல் உயிரை வாங்கும். இதை சுத்தம் செய்வது ஒரு பெரிய சவாலாக இருக்கும். அதையும் எப்படி எளிமையாக செய்யலாம் என்பதை தான் இங்கே பார்க்கலாம்.

பாத்ரூமில் படிந்திருக்கும் உப்பு கறை போக

பாத்ரூமில் டைல்ஸில் படிந்திருக்கும் உப்பு கறையை போக்க, முதலில் 1 பவுலில் 1 டம்ளர் தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் 2 டேபிள் ஸ்பூன் தூள் உப்பு அல்லது கல் உப்பு இரண்டில் எதை வேண்டுமானாலும் சேர்த்துக் கொள்ளுங்கள். அடுத்ததாக அதில் 2 ஸ்பூன் சமையல் சோடா மாவையும் சேர்த்து நன்றாக கலந்து விடுங்கள்.

salt stain,bathroom , உப்பு கறை,பாத்ரூம்

அதன் பிறகு இத்தண்ணீரில் ஒரு ரூபாய் ஷாம்பூ பாக்கெட்டில் உள்ள ஷாம்பு முழுவதுமாக சேர்த்துக் கொள்ளுங்கள். இதற்கு நீங்கள் பயன்படுத்தும் வேறு எந்த ஷாம்பு வேண்டுமானாலும் உபயோகித்துக் கொள்ளலாம். அல்லது ஹேண்ட் வாஷ் இருந்தால் அதையும் கூட பயன்படுத்திக் கொள்ளலாம். இதை சேர்த்த பிறகு தண்ணீரை நன்றாக கலந்த பிறகு ஸ்ப்ரே பாட்டில் ஊற்றிக் கொள்ளுங்கள்.

அவ்வளவு தான் பாத்ரூமை சுத்தப்படுத்த தேவையான லிக்விட் நமக்கு தயாராகி விட்டது. இதை உப்புக் கறை படிந்த இடத்தில் எல்லாம் நன்றாக ஸ்பிரே செய்து விடுங்கள். லேசான கறைகள் என்றால் ஸ்பிரே செய்த உடனே தேய்த்து விட்டால் கூட கறைகள் போய் விடும். அதுவே சற்று கடினமான கறைகள் என்றால் இதை ஸ்பிரே செய்த பிறகு 10 நிமிடம் வரை காத்திருந்து அதன் பிறகு தேய்த்து விடுங்கள்.

இந்த முறையில் உங்கள் பாத்ரூமை சுத்தம் செய்யும் பொழுது உப்புக் கறைகள் முழுமையாக நீங்குவதுடன் பாத்ரூம் நல்ல நறுமணத்துடன் பளிச்சென்று இருக்கும். இந்த லிக்விடை பயன்படுத்தி தேய்க்கும் பொழுது தினமும் பாத்ரூமை சுத்தம் செய்யத் தேவையில்லை. வாரத்தில் ஒரு நாள் மட்டும் இந்த லிக்விடை பயன்படுத்தி சுத்தம் செய்து விட்டு, மற்ற நாட்களில் சாதாரணமாக சுத்தம் செய்து பாத்ரூமை தூய்மையாக வைத்துக் கொண்டாலே போதும் உப்புக் கறை தொந்தரவு இருக்காது.

Tags :