Advertisement

வாஸ்து நிறைந்த வீடு வாழ்க்கையை செழிப்பாக மாற்ற உதவும்

By: Nagaraj Mon, 13 Nov 2023 11:23:40 AM

வாஸ்து நிறைந்த வீடு வாழ்க்கையை செழிப்பாக மாற்ற உதவும்

சென்னை: ஒருவர் தங்குவதற்கு மிக முக்கியமாக தேவைப்படுவது வீடு. அப்படிப்பட்ட இந்த வீடு வாஸ்து படி சரியாக கட்டப்பட்டிருந்தாலே அவர்களுடைய வாழ்க்கை செழிப்பாக மாறும். சரி வாஸ்து படி உங்கள் வீட்டு கதவு எந்த திசையில் இருந்தால் நல்லது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

கிழக்கு திசை: உங்கள் வீட்டின் பிரதான கதவு கிழக்கு திசையில் இருந்தால் நல்லது. அது மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகிறது. ஏனென்றால் இந்த திசையில் சூரியன் உதயமாவதால் உங்கள் வீட்டில் சூரிய ஒளி சிறப்பாக விழும். வீட்டில் சிறப்பாக சூரிய ஒளி விழுந்தாலே தீய சக்திகள் நீங்கும் மற்றும் பூச்சிகள், கிருமிகள் தங்காது. அதுமட்டுமல்லாமல் இந்த திசை ஆன்மீக சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

house,main door,wealth,removal of evil,direction ,வீடு, பிரதான கதவு, செல்வம், தீமை அகற்றம், திசை

வடக்கு திசை: வாஸ்து முறைப்படி வடக்கு திசை கடவுளின் திசை அதாவது குபேர திசை என்றழைக்கப்படுகிறது. அதனால் இந்த திசையில், உங்கள் வீட்டின் பிரதான கதவு இருப்பது சிறந்தது. வடக்கு திசையில் கதவு இருப்பதால் வீட்டிற்கு பல நற்பலன்கள் ஏற்படும் என்பதோடு உங்கள் மனதில் ஆன்மீக சிந்தனைகள் ஏற்படுகிறது.

மேற்கு திசை: மேற்கு திசையில் முக்கிய நுழைவு வாயில் இருந்தால் வாழ்க்கையில் சற்று மெதுவாக முன்னேற்றத்தை அடைவார்கள். ஆனால் அவர்களின் வெற்றி நிரந்தரமானதாக இருக்கும். இந்த திசையில் ஒருபோதும் ஆபத்து இல்லை.

தெற்கு திசை: வீட்டின் பிரதான கதவு தெற்கு திசையில் இருப்பது மிகவும் மோசமானது. இந்த திசையில் பிரதான கதவை வைப்பதால் அந்த வீட்டின் உரிமையாளருக்கும், அதில் குடியிருப்பவருக்கும் தீமையை ஏற்படுத்தும். மேலும் மரணத்திற்குக் கூட ஆளாக நேரிடும். இது மரணத்தின் வாயில் என கொள்ளலாம். இந்த திசையிலிருந்து பித்ருக்கள் வீட்டிற்கு வருவதாக நம்பப்படுகிறது. அதனால் இந்த திசையின் பிரதான கதவு வைப்பது நல்லதல்ல.

Tags :
|
|