- வீடு›
- வாழ்வியல் முறை›
- Whatsapp செயலியில் ஐஓஎஸ் பயனர்களுக்கான புதிய அப்டேட் வசதி ஒன்று வெளியீடு
Whatsapp செயலியில் ஐஓஎஸ் பயனர்களுக்கான புதிய அப்டேட் வசதி ஒன்று வெளியீடு
By: vaithegi Wed, 23 Aug 2023 3:04:27 PM
இந்தியா: Whatsapp செயலியில் இனி வீடியோ மெசஜ்களை அனுப்பலாம் ..மெட்டாவுக்கு சொந்தமான WhatsApp செயலியின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் பயனர்களின் வசதிக்கான பல்வேறு புதிய அம்சங்களையும் அறிமுகம் செய்து கொண்டு வருகிறார்.
இதையடுத்து சமீபத்தில் தான் WhatsApp செயலில் HD தரத்திலான புகைப்படங்களை அனுப்புவதற்கும் HD வீடியோக்களை அனுப்புவதற்குமான வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த வசதிகள் பெரும்பாலான மக்களால் அதிக வரவேற்பை பெற்றது.இந்த நிலையில் WhatsApp செயலியில் ஐஓஎஸ் பயனர்களுக்கான புதிய அப்டேட் ஒன்று வெளியாகிவுள்ளது.
எனவே அதன்படி ஐஓஎஸ் சாதனங்களில் இனி பயனர்கள் வீடியோ செய்திகளை அனுப்பிக் கொள்ளும் வசதியை பெறலாம். இதற்காக சாட் பாக்ஸில் உள்ள மைக்ரோபோன் ஐக்கானை தொடுவதன் மூலம் இதற்கான பயன்பாட்டை நீங்கள் பெற முடியும். இதேபோன்று வீடியோ கால் பேசும்போது பயனர்கள் தங்களின் திரைகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கான ஸ்கிரீன் ஷேரிங் அம்சமும் வெளியாகி உள்ளது.
இந்த புதிய அம்சங்கள் இனிவரும் வாரங்களில் படிப்படியாக பயனர்களுக்கு கிடைக்கும் வகையில் திட்டமிடப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தெரியாத நபர்களிடமிருந்து வரும் அழைப்புகளை தவிர்க்கவும், வீடியோ காலில் லேண்ட் ஸ்கேப் பயன்முறையை பயன்படுத்தவும் புதிய அம்சங்கள் வெளியாகி உள்ளது.