Advertisement

வாட்ஸ்அப்பில் புதிய அப்டேட் ஒன்று வெளியீடு

By: vaithegi Tue, 24 Oct 2023 4:27:57 PM

வாட்ஸ்அப்பில் புதிய அப்டேட் ஒன்று வெளியீடு

இந்தியா: வாட்ஸ்அப் சேனல்களில் அவதாரம் வடிவிலான எமோஜிகள், மற்றும் வாய்ஸ் நோட்டுகளை அனுப்பும்படியான புதிய அப்டேட் வெளியீடு .. WhatsApp நிறுவனம் பயனர்களின் அனுபவத்தை மேலும் சிறப்பாகும் வகையில் பல அப்டேட்களை வெளியிட்டபடி இருந்து வருகிறது. அந்த வகையில், ஒரே WhatsApp செயலியில் 2 அக்கவுண்டுகளை லாகின் செய்யும்படியான அப்டேட் வழங்கப்பட்டு உள்ளது.

மேலும் இதுபோக, புகைப்படத்தினை 1 முறை மட்டுமே பார்க்கும் படியான வசதியைப் போல வாய்ஸ் மெசேஜ்களையும் ஒருமுறை மட்டுமே கேட்கும்படியான வசதியும் பயனர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது.

update,whatsapp ,அப்டேட் ,வாட்ஸ்அப்


இதனைத் தொடர்ந்து சேனல் தொடர்பாக WhatsApp நிறுவனம் புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, வாட்ஸ்அப் மூலமாக நீங்கள் பின் தொடரும் சேனல்களில் அவதாரம் வடிவிலான எமோஜிகள், மற்றும் வாய்ஸ் நோட்டுகளை அனுப்பலாம் என்று WhatsApp நிறுவனம் அறிவித்துள்ளது.

இதையடுத்து தற்போதைக்கு இந்த அப்டேட் WhatsApp டெஸ்டர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு உள்ளதாகவும், ஓரிரு நாட்களில் ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கும் வழங்கப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

Tags :
|