Advertisement

Whatsappல் வந்து இருக்கும் புது அப்டேட்

By: vaithegi Wed, 22 Nov 2023 12:41:06 PM

Whatsappல் வந்து இருக்கும் புது அப்டேட்


இந்தியா: வாட்ஸ்ஆப் நிறுவனம் சில வாரங்களுக்கு முன் தான் ஈமெயில் வெரிஃபிகேஷன் முறையை அமல்படுத்த இருப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது IOS யூசர்களுக்கு இந்த அப்டேட் வெளியீடு ...

மக்கள் பலர்பயன்படுத்தும் செயலியாக வாட்ஸ்ஆப் இருக்கிறது. இதையடுத்து இந்தியாவில் சுமார் 535 மில்லியன் பயனாளிகள் வாட்ஸ்ஆப்பில் இருக்கின்றனர். இந்த நிலையில் வாட்ஸ்ஆப்பில் மொபைல் எண் மூலமாக வெரிஃபிகேஷன் செய்யப்பட்டது .

update,whatsapp ,அப்டேட்,வாட்ஸ்ஆப்

தற்போது ஈமெயில் மூலம் வெரிஃபிகேஷன் செய்யும் முறையை அமல்படுத்த இருப்பதாக சில வாரங்களுக்கு முன் வாட்ஸ்ஆப் நிறுவனம் அறிவித்தது. இதனை அடுத்து இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை நிறுவனம் வெளியிட்டு உள்ளது.

அதாவது பீட்டா வெர்ஷனில் மட்டுமிருந்த இந்த முறையை இப்போது உலகளவில் iOS வெர்ஷன் யூசர்களுக்கு புதிய அப்டேட்டில் (இந்த ஈமெயில் வெரிஃபிகேஷனை) அறிமுகப்படுத்தி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அப்டேட் மூலமா இனிமேல் மொபைல் நம்பர் இல்லாமல் ஈ-மெயில் வெரிஃபிகேஷன் செய்து வாட்சப் அக்கவுண்ட்டை பயன்படுத்தலாம்.


Tags :
|