Advertisement

  • வீடு
  • வாழ்வியல் முறை
  • பழைய கவரிங் ,வெள்ளி நகைகளை புதுசு போல மாத்த ஒரே 1 ஸ்பூன் தயிரோடு இந்த பொருளை மட்டும் சேர்த்தால் போதும்

பழைய கவரிங் ,வெள்ளி நகைகளை புதுசு போல மாத்த ஒரே 1 ஸ்பூன் தயிரோடு இந்த பொருளை மட்டும் சேர்த்தால் போதும்

By: vaithegi Sun, 06 Aug 2023 2:45:16 PM

பழைய கவரிங் ,வெள்ளி நகைகளை புதுசு போல மாத்த ஒரே 1 ஸ்பூன் தயிரோடு இந்த பொருளை மட்டும் சேர்த்தால் போதும்

வீட்டில் பெரும்பாலும் ஒன்று இரண்டு கவரிங் நகைகளாவது எல்லோரும் பயன்படுத்துவார்கள். இந்த கவரிங் நகைகளை பொருத்த வரையில் ஒரு முறை பயன்படுத்தி கறுத்து விட்டால் மறுமுறை அதை பாலிஷ் செய்து பயன்படுத்த யோசிப்பார்கள். இதற்கு காரணம் வாங்கும் நகையின் விலையை விட பாலீஷ் செய்ய அதிக விலை கொடுக்க வேண்டியது இருக்கும். ஆகையால் கறுத்து போய்விட்டால் அதை தூர தூக்கி போட தான் பார்ப்பார்கள்.

கவரிங் நகையை எந்த அளவிற்கு எல்லோரும் பயன்படுத்துகிறோமோ அதே போல் இன்றைய காலகட்டத்தில் எல்லோர் வீட்டிலும் ஒன்று இரண்டு வெள்ளி பொருட்களாவது இருக்கும். இந்த வெள்ளிப் பொருட்களும் கறுத்து விட்டால் சுத்தம் செய்வது மிகவும் கடினமாக இருக்கும். ஆகையால் தான் இது இருந்தாலுமே கூட பயன்படுத்தாமல் அப்படியே எடுத்து வைக்கத் தான் யோசிப்பார்கள். இந்த இரண்டுமே ரொம்ப சுலபமாக எப்படி சுத்தம் செய்து பயன்படுத்துவது என்பதை பற்றி பார்ப்போம்.

பழைய கவரிங் கறுத்து போன வெள்ளி நகைகளை சுத்தம் செய்ய:
இம்முறையில் சுத்தம் செய்ய முதலில் ஒரு ஸ்பூன் நல்ல புளித்த தயிரை எடுத்துக் கொள்ளுங்கள். இதற்கு தயிர் நன்றாக புளித்திருக்க வேண்டியது மிக மிக அவசியம். அடுத்து நாம் வீட்டில் பயன்படுத்தும் கம்ப்யூட்டர் சாம்பிராணி எரிந்த பிறகு அதிலிருந்து கிடைக்கும் துகள்களை எடுத்துக் கொள்ளுங்கள். கம்ப்யூட்டர் சாம்பிராணி பயன்படுத்தவில்லை ஊதுபத்தி தான் பயன்படுத்துகிறோம் என்றாலும் பரவாயில்லை அந்த துகளையும் எடுத்துக் கொள்ளுங்கள்.

covering,silver jewelry ,கவரிங் ,வெள்ளி நகை,


ஒரு சிறிய கிண்ணத்தில் இந்த இரண்டையும் ஒன்றாக சேர்த்து நன்றாக கலந்து பேஸ்ட் போல குழைத்துக் கொள்ளுங்கள். இப்போது உங்களிடம் இருக்கும் பழைய கறுத்து போன கவரிங் நகை வெள்ளி நகை இரண்டின் மீதும் இந்த பேஸ்ட்டை நன்றாக தேய்த்து ஒரு 5 நிமிடம் அப்படியே விட்டு விடுங்கள். அதன் பிறகு இதை லேசாக கை வைத்து தேய்த்து சுத்தம் செய்து கொள்ளுங்கள். வெள்ளி நகைகள் பூஜை பாத்திரங்களாக இருந்த பிரஷ் வைத்து தேய்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில் இதன் மூளை முடுக்குகளில் இருக்கும் அழுக்குகள் எல்லாம் வெளிவர பிரஷ் பயன்படுத்தினால் தான் சரியாக இருக்கும்.

இப்படி தேய்த்து விட்ட பிறகு சுத்தமான தண்ணீரில் இந்த பொருட்களை எல்லாம் போட்டு கழுவியப் பிறகு ஒரு மெல்லிய காட்டன் துணி வைத்து துடைத்து ஈரம் நன்றாக காய்ந்த பிறகு மறுமுறை துடைத்து பயன்படுத்துங்கள். நீங்கள் பயன்படுத்தி கறுத்த பழைய கவரிங் நகை புதுசு போல மின்னும் இதே போல வெள்ளி நகைகளும் பளபளவென்று மாறி விடும்.

Tags :