Advertisement

  • வீடு
  • வாழ்வியல் முறை
  • பட்டு புடவைக்கான பிளவுஸ்களை தேர்வு செய்யும் முன் கண்டிப்பா இதையெல்லாம் தெரிஞ்சுக்கோங்க!

பட்டு புடவைக்கான பிளவுஸ்களை தேர்வு செய்யும் முன் கண்டிப்பா இதையெல்லாம் தெரிஞ்சுக்கோங்க!

By: Monisha Sat, 05 Dec 2020 1:16:32 PM

பட்டு புடவைக்கான பிளவுஸ்களை தேர்வு செய்யும் முன் கண்டிப்பா இதையெல்லாம் தெரிஞ்சுக்கோங்க!

பட்டு புடவைக்கான பிளவுஸ்களை தேர்வு செய்வது என்பது ஒரு கலை. இதற்கு ஒரு தனி ரசனையும், ஆர்வமும் இருக்க வேண்டும். உங்களுக்கு பிளவுஸ்களை தேர்வு செய்வதில் குழப்பங்கள் இருந்தால், கீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகள் ஒரு சரியான பிளவுஸ் தேர்வைவு செய்ய உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்;

நீங்கள் தேர்வு செய்யும் பிளவுஸ் பட்டு புடவையின் டிசைனுக்கு ஏற்றதாக இருக்க வேண்டும். பிளவுஸ்சின் நிறம் பட்டு புடவையின் நிறத்திற்கு ஏற்றதாக இருக்க வேண்டும். மாறுபட்டு இருக்கக் கூடாது. நீங்கள் தேர்வு செய்யும் பிளவுஸ் எளிமையாக இருக்க வேண்டுமா அல்லது ஆடம்பரமாக இருக்க வேண்டுமா என்று தீர்மானம் செய்யுங்கள்

புடவையில் இருக்கும் டிசைனுக்கு ஏற்றவாறு பிளவுஸ் டிசைனும் இருக்க வேண்டும். நீங்கள் கனமான பட்டு புடவையை தேர்வு செய்திருந்தால், பிளவுஸ்சின் கழுத்து பகுதி எளிமையாக இருக்க வேண்டும். கைகளில் வேலைப்பாடுகள் செய்யப்பட்ட பிளவுஸ் பட்டு புடவைக்கு ஏற்ற தேர்வாக இருக்கும்.

silk sarees,blouses,designs,embroidery,engraving ,பட்டு புடவை,பிளவுஸ்,டிசைன்,எம்பிராய்டரி,வேலைப்பாடு

பாரம்பரிய டிசைன் முதல் நவீன டிசைன்கள் வரை உங்கள் பட்டு புடவை பிளவுஸ்சுக்கான டிசைன்களை நீங்கள் தேர்வு செய்யலாம். நீங்களாகவே வடிவமைக்கலாம்.

அதிக எம்ப்ரைடரிங் செய்யப்பட்ட பிளவுஸ் சில சமயங்களில் அசௌகரியமாக இருக்கக் கூடும். அதனால், தேவைக்கேற்ப குறைந்த எம்ப்ரைடரிங் வேலைப்பாடு இருக்கும் பிளவுஸ்சை தேர்வு செய்வது நல்லது. விரிந்த தோள்கள் உடையவர்களாக நீங்கள் இருந்தால், நன்கு விரிந்த கழுத்து வடிவமைப்பை தேர்வு சிய வேண்டும். மேலும் ஓரங்களில் பட்டை போன்ற பைபிங் தருவது அழகாக இருக்கும்.

சற்று மெல்லிய உடலமைப்பு உடையவர்கள் நீண்ட கைகள், மெல்லிய ஸ்டராப் மற்றும் விரிந்த கழுத்து வடிவமைப்பை வைத்து பிளவுஸ்சை வடிவமைக்கலாம். தடிமமான கைகளை உடையவர்கள் கை இல்லாத பிளவுஸ்களை தவிர்ப்பது நல்லது. நீண்ட கைகளை உடையவர்கள் முக்கால் அல்லது முழு நீல கைகளை கொண்ட பிளவுஸ்களை அணியலாம்.

silk sarees,blouses,designs,embroidery,engraving ,பட்டு புடவை,பிளவுஸ்,டிசைன்,எம்பிராய்டரி,வேலைப்பாடு

உடல் பருமனாக இருப்பவர்கள், தொப்பையை மறைக்க, சற்று நீளமான பிளவுஸ்களை வடிவமைக்கலாம். இது சற்று அழகான தோற்றத்தையும் உங்களுக்குத் தரும். ரெடி மேட் பிளவுஸ் வாங்கப் போகின்றீர்களா அல்லது உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப தைக்க போகின்றீர்களா என்பதை தீர்மானம் செய்ய வேண்டும்.

நீங்கள் அணியும் பிளவுஸ் உங்களுக்கு சௌகரியமாக இருக்க வேண்டும். விழாவன்று அணிவதற்கு முன், பிளவுஸ் தயாரானதும் அதனை ஒரு முறை அணிந்து பார்ப்பது நல்லது. புடவைக்கு ஏற்ற சரியான பிளவுஸ்சை தேர்வு செய்து அணிய வேண்டும். நவீன வடிவங்களை புடவையின் டிசைனுக்கு ஏற்றவரு தேர்வு செய்து அணிய வேண்டும்.

தங்கம், வெள்ளி போன்ற சரிகைகள் வைத்த பிளவுஸ்களை கவனமாக தேர்வு செய்ய வேண்டும். நீங்கள் அணியப்போகும் விழா காலத்திற்கு ஏற்றவாறு, துணியின் வகையை தேர்வு செய்ய வேண்டும்.

Tags :