Advertisement

கண்ணாடி வளையல்கள் அணிவதால் ஏற்படும் நன்மைகள்

By: Nagaraj Thu, 23 Feb 2023 11:08:51 PM

கண்ணாடி வளையல்கள் அணிவதால் ஏற்படும் நன்மைகள்

சென்னை: பெண்கள் கண்ணாடி வளையல்களை முற்றிலுமாக மறந்துவிட்டனர். ஆனால் நமக்கு தெரியாத பல நன்மைகள் கண்ணாடி வளையல்களுக்குள் ஒளிந்துள்ளது அவற்றை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம் வாங்க!

கண்ணாடி வளையலில் தேவி தத்துவம், சாத்வீகத்தன்மை மற்றும் சைதன்யம் நிரம்பியுள்ளன. அவை சூழ்ந்துள்ள சாத்வீக, சைதன்ய அதிர்வலைகளை ஈர்க்கின்றன. கண்ணாடி வளையல்களின் ஓசை, தீய சக்திகளை விரட்டியடித்து தேவியின் அருள் கிடைக்க உதவுகிறது.

அந்த வளையல்களை அணிந்திருக்கும் பெண்ணின் மீது விழும் கெட்டப் பார்வையையும்(திருஷ்டி), கெட்ட சக்திகளையும் அழிக்கிறது. கர்ப்பணி பெண்களுக்கு வளைகாப்பு, சீமாந்தம் போன்ற சடங்குகள் வைப்பது முற்காலத்திலிருந்தே கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

கர்ப்பிணி பெண்களுக்கு கண்ணாடி வளையல்கள் அவசியம் என கூற காரணம் என்னவென்றால், நிறைமாத பெண்மணி மெல்ல நடந்துவரும் உடல் வாகைக் கொண்டிருப்பாள்.

glass bangle,fashion,pregnant women,young girls ,,கண்ணாடி வளையல்,பேஷன்,கர்ப்பிணி பெண்கள்,கன்னிப்பெண்கள்

அதனால் அவள் வரும் போது முன்னே, பின்னே அக்கம் பக்கத்தில் செல்பவர்கள் அவள் வருவதைப்புரிந்து கொண்டு அவளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் ஒதுங்கிச் செல்வதற்கு அந்தக் கண்ணாடி வளையோசை உதவும் என்பதே ஆகும்.

பொதுவாகவே பெண்கள் இப்படி கண்ணாடி வளையல்கள் அணிவது, அவர்களுக்கு ஒரு பாதுகாப்பு அம்சமாகவே இருந்து வந்திருக்கிறது. கங்கன் எனப்படும் வளையல், கன்னிப்பெண்களுக்கும் சுமங்கலிகளுக்கும் ஒரு முக்கியமான ஆபரணமாகும்.

கண்ணாடி வளையல்கள் லேசாக உடைந்திருந்தாலோ, கீறல் விழுந்திருந்தாலோ அணியக்கூடாது. ஏனென்றால், இந்த விரிசல் மூலமாக தீய சக்திகள் உடலில் புக வாய்ப்புள்ளது.

Tags :