Advertisement

காட்டன் உடையில் இவ்வளவு நன்மைகளா? கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க!

By: Monisha Wed, 23 Sept 2020 1:20:10 PM

காட்டன் உடையில் இவ்வளவு நன்மைகளா? கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க!

உடைகள் என்பது அவரவர் நாட்டு வெட்ப நிலைக்கு ஏற்றார் போலவும், பணிபுரியும் வேலைக்கு ஏற்றார் போலவும் தான் ஆதிகாலத்தில் உடுத்தப்பட்டு வந்தது. ஆனால் தற்போது பேஷன் என்ற பெயரில் வெட்ப நிலைக்கு ஒத்துபோகாத உடைகளை உடுத்தி வருகிறோம். பருத்தி என கூறப்படும் காட்டன் துணியானது, நமது இந்திய நாட்டின் வெட்ப நிலைக்கு சரியாக பொருந்தும் உடையாகும். இது, வெயில், குளிர் என இரண்டு காலங்களிலும் உடுத்தலாம்.

கொஞ்சம் யோசித்து பாருங்கள், சென்னை மாநகரில் கொளுத்தும் வெயிலில் சூட் அணிந்து டை கட்டிக்கொண்டு சென்று, வீடு திரும்பும் போது, அந்த ஆண் சிக்கன் 65 ஆக தான் இருப்பார். எனவே, நமது காலநிலைக்கு ஏற்ற உடையான காட்டன் உடை உடுத்துவது தான் நல்லது மற்றும் அதில் நிறைய நன்மைகளும் இருக்கிறது.

பருத்தி என்பது இயற்கையான முறையில் கிடைக்கும் நூல் வகை ஆகும். இது ஈரப்பதத் தன்மையை கொண்டுள்ளது. எனவே, வெயிலிலும் உடலை குளுமையாக உணர செய்யும். காட்டன் நூலிழைகள் கற்று புகும் தன்மையுடையவை. எனவே, எவ்வளவு வெயிலாக இருந்தாலும் காற்றோட்டமாக இருக்கும். இதனால், கடும் வெயிலிலும் வெப்பம் குறைந்து உணரப்படும்.

cotton style,fashion,temperature,nature,beauty ,காட்டன் உடை,பேஷன்,வெட்ப நிலை,இயற்கை,அழகு

காட்டன் துணியின் மிக சிறந்த நன்மை என கருதப்படுவது, வியர்வையை உறிஞ்சும் தன்மை. நீங்கள் அதிகம் வெயிலில் அலையும் போது, பாலியஸ்டர் துணிகளும், பாலியஸ்டர் கலப்பு உள்ள துணிகளும் வியர்வைய உறிஞ்சாது அதனால் நாள் முழுக்க வியர்வை உடலில் ஒற்றியப்படியே இருக்கும்.

காட்டன் உடைகள் வெயில் மற்றும் குளிர் என இரண்டு காலங்களிலும் உங்கள் சருமத்தை பாதுகாக்கும் தன்மை கொண்டது. வெப்பத்தை குறைப்பதனால், கோடை சரும பிரச்சனைகள் ஏற்படாமல் உங்கள் சருமத்தை காக்கிறது. மற்ற உடைகள் அணியும் போது உங்கள் சருமதிற்கு ஒவ்வாமை ஏற்பட வாய்ப்புகள் இருக்கின்றன. அதும், கோடையில் கட்டாயம் சரும ஒவ்வாமை ஏற்படும். காட்டன் துணி உடுத்துவதால் சரும ஒவ்வாமைகள் ஏற்படாது.

cotton style,fashion,temperature,nature,beauty ,காட்டன் உடை,பேஷன்,வெட்ப நிலை,இயற்கை,அழகு

உடுத்த மிகவும் வசதியான உடை காட்டன் ஆகும். மற்ற உடைகளை போல அசௌகரியம் இல்லாமல் இருக்கும். மற்ற உடைகளோடு ஒப்பிடுகையில் பருத்தி உடையானது நிலைப்புத்தன்மை அதிகமுடையது. வருடங்கள் பல கடந்தாலும் நிலைத்து உழைக்கும்.

ஒவ்வோரு உடையும் ஒவ்வோரு மாதிரி துவைக்க வேண்டும் என்று சில குறிப்புகள் தரப்பட்டிருக்கும். ஆனால், காட்டன் துணியை சுடுநீர், குளிர்ந்தநீர் என்று எந்த நீரிலும் எளிதாக துவைக்கலாம், சேதமடையாது. சில வகை துணிகள் ஓரிரு முறை அல்லது ஓரிரு மாதங்கள் பயன்படுத்திய பிறகு நிலை மாற்றமடைந்துவிடும். சுருங்குவது, ஏற்ற இறக்கமாக, அங்கும் இங்கும் இழுத்தவாறு இருக்கும். ஆனால், பருத்தி உடைகள் அவ்வாறு ஆகாது.

Tags :
|