Advertisement

தீபாவளிக்கு வீட்டை இம்முறை இந்த மாதிரி அலங்காரம் செய்து பாருங்க

By: vaithegi Sun, 05 Nov 2023 3:52:29 PM

தீபாவளிக்கு வீட்டை  இம்முறை இந்த மாதிரி அலங்காரம் செய்து பாருங்க

பண்டிகைக் காலம் என்பது வீடுகளை அழகான அலங்காரங்களால் அலங்கரிக்கும் காலமாகும். தீபாவளியை தொடர்ந்து கார்த்திகை பண்டிகை வருகிறது, திருவிழாக் காலம் வந்துவிட்டாலே வீடு முழுக்க அலங்காரங்கள் என்று கண்ணை சொக்க வைப்பது போல் சும்மா ஜோலி ஜோலினு ஜொலிக்கும்.

ஒளியின் திருவிழா என்றும் அழைக்கப்படும் தீபாவளி பண்டிகையின் போது, குடும்பங்கள் மற்றும் நண்பர்கள் வருகையை முன்னிட்டு, வீட்டை அற்புதமாக மாற்றுவதற்கு அலங்காரங்ம் முக்கிய பங்கு வகுக்கிறது. இந்த நிலையில், மலிவு விலையில் மகிழ்ச்சி நிறைந்த உங்கள் வீட்டை அலங்காரம் செய்து இந்த தீபாவளியை கொண்டாடுவோம்.

விளக்குகள்

முதலில் மங்களகரமாக விளக்குகளில் இருந்து தொடங்குவோம், அதில் பாரம்பரிய எண்ணெய் விளக்குகள் தீபாவளிக்கு முக்கியம். வீடு முழுக்க தீபம் ஏற்றி வைப்பதால் வீடு வண்ணம் மிகுந்து ஒளிரச்செய்யும். அதுவே அந்த விளக்குகளை உங்கள் வீட்டில் கோலமிட்டிருக்கும் வடிவத்திற்கு ஏற்ப வரிசை கட்டி வைத்தால் கூடுதல் அழகு கூடி வரும்.

இந்தாண்டு தீபாவளியை, சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில், மலிவு விலையில் மண், செராமிக் டையாக்கள் மற்றும் மறுசுழற்சி செய்யக்கூடிய உலோக பாத்திரங்கள் மூலம் உருவாக்க பட்டிருக்கும் விளக்குகளை பயன்படுத்தி உங்கள் விருந்தினர்களை வரவேற்கவும்.

decoration,diwali ,அலங்காரம் ,தீபாவளி


பூஜை அறையில் விளக்கு ஏற்றுதல்

தீபாவளியின் போது, முக்கியமாக பூஜை அறை பண்டிகை மையமாக மாறும். அப்படிப்பட்ட பூஜை அறையை தெய்வீக சூழலாக உருவாக்க மாலைகள், மலர்கள் மற்றும் தொங்கு விளக்குகளால் அதனை அலங்கரிக்கலாம்.
மலர்கள்

மேலும், நம் வீட்டை சிறப்பாக மாற்றுவதற்கு மலர்கள் நிறைந்த தோரணங்களை வீட்டின் வாசல், பூஜை அறையின் தூண்களில் கட்டி அழகாக்கலாம். ஆனால், பண்டிகையை முன்னிட்டு மலர்களின் விலை மிகவும் அதிகமாக உள்ளது. இதனால், ஆன்லைனில் கிடைக்கும் செயற்கை மாலைகளை வாங்கி கட்டி கொண்டாடுங்கள்.

மின் விளக்குகள்

விளக்குகளை ஒளிர செய்வதை தாண்டி, வீடு முழுக்க மின் விளக்குகளால் அலங்கரித்து, கூடுதல் அழகை சேர்க்கலாம். வீட்டு மாடிகளில் சின்ன சின்ன மின் விளக்குகளை ஒளிர செய்து இத்தீபாவளியை கொண்டாடி மகிழுங்கள்.
மெழுகுவர்த்தி

மண் விளக்குகள் வேண்டாம் என்றால், மெழுகுவர்த்தி பயன்படுத்தி வீட்டின் வாசலை கண்கவர செய்யுங்கள். வீட்டின் வாசல் மற்றும் பூஜையறை முன்பு கோலமிட்டு அதன் மீது மெழுகுவர்த்தியை பொருத்தி வைப்பதால் மேலும் சிறப்பாக மாற்றலாம்.

ஸ்டிக்கர்ஸ்

வெறும் சுவர்களில் தீபம் ஏற்றமால் விட்டால், அது எப்படி பிரகாசிக்கும் மக்களே? அதற்க்கும் ஒரு ஐடியா இருக்கு. ஆன்லைன்களில் கிடைக்கும் தீபம் எறியக்கூடிய விளக்குகளை வாங்கி நம் வீட்டின் உல் சுவர்களின் ஓட்டி, அதிலும் ஒளிரும்படி செய்து இந்த தீபாவளியை மிகவும் பிரமாண்டமாக கொணடாடலாம்.

Tags :