Advertisement

கார்த்திகை மாதத்தில் ஏற்ற வேண்டிய தீபம்

By: vaithegi Thu, 16 Nov 2023 3:59:25 PM

கார்த்திகை மாதத்தில் ஏற்ற வேண்டிய தீபம்

தீபம் என்றால் ஆதி உருவைத் தீயில் காண்பது என்று பொருள்.கார்த்திகை மாதம் என்றாலே அது தீபத்திற்குரிய மாதம் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. ஆகையால் நாமும் தினமும் வீட்டில் தீபம் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும். அது மட்டும் இன்றி கார்த்திகை மாதத்தில் சூரிய ஒளி பூமிக்கு குறைவாக கிடைக்கும். ஆகையால் வீட்டில் அதிக அளவு தீபம் ஏற்றும் போது வெப்பம் அதிகரிக்கும். இதனால் நோய் நொடி இன்றி இருக்கலாம் என்றும் அறிவியல் பூர்வமாக சொல்லப்பட்டிருக்கிறது. நம் முன்னோர்கள் கடைப்பிடித்த ஒவ்வொரு விஷயத்திலும் ஆன்மீகத்துடன் அறிவியலையும் கலந்தே செய்திருக்கிறார்கள் என்பதை இதன் மூலம் அறியலாம். இந்த தீபத்தை அதிகாலை 4 மணி முதல் 5.30 மணிக்குள்ளாக ஏற்ற வேண்டும்
அதாவது பிரம்ம முகூர்த்த நேரத்தில் நம் வீட்டில் இந்த தீபம் ஏற்றப்பட்டு இருக்க வேண்டும். இந்த தீபம் ஏற்ற அதிகாலையில் எழுந்து தலை ஸ்தானம் செய்து விட வேண்டும். இது மிகவும் அவசியம். ஏனெனில் கார்த்திகை மாதத்தில் நாள்ஸதோறும் சூரிய உதயத்திற்கு முன்பாக எழுந்து நீராடுபவர்கள் சகல புண்ணிய தீர்த்தத்திலும் நீராடிய பலனை பெறுவார்கள் என்று சொல்லப்படுகிறது. அது மட்டும் இன்றி ஐப்பசி மாதத்தில் நீராடும் துலா ஸ்தான பலனை இந்த ஒரு மாதம் நீராடும் போது பெற முடியும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

deepam,karthikai ,தீபம்,கார்த்திகை

காலையில் குளித்து விட்டு அதன் பிறகு உங்கள் வீட்டில் துளசி மாடம் இருந்தால் அந்த இடத்தில் அகல் தீபம் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும். அதன் பிறகு வீட்டு பூஜை அறை, நிலை வாசலில் தீபம் ஏற்றி வழிபடுவது சிறந்தது. இந்த மாதத்தில் நாம் வீட்டில் எத்தனை விளக்கு ஏற்றுகிறோமோ அத்தனை ஐஸ்வர்யங்கள் நமக்கு பெருகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதே போல் கார்த்திகை மாதத்தில் சிவாலயங்களில் சென்று தீபம் ஏற்றி வழிபடும் பொழுது நமக்கு கோடி புண்ணிய பலன்களை தரும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அது மட்டும் இன்றி இந்த மாதத்தில் சிவலிங்கத்திற்கு நெய் அபிஷேகம் செய்வதும் வில்வம் மரிக்கொழுந்து போன்றவற்றால் அர்ச்சனை செய்வதும் குடும்பத்திற்கு மகிழ்ச்சியை தரும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. வீட்டில் துளசி மாடத்தில் ஏற்றப்படும் தீபம் விஷ்ணு தீபமாகவும், சிவ ஆலயத்தில் ஏற்றப்படும் தீபம் சிவ தீபமாகவும் கருதப்படுகிறது. இந்த இரண்டு தீபங்களால் நம் வாழ்வில் எண்ணற்ற மகிழ்ச்சி உண்டாகும்.

இந்த கார்த்திகை மாதத்தில் தீபதானம் செய்வது சால சிறந்தது. இந்த தானம் செய்பவர்கள் பிரம்மஹத்தி போன்ற கடுமையான தோஷத்தில் இருந்து விடுதலை பெறுவார்கள் என சொல்லப்படுகிறது. மேலும் இந்த மாதத்தில் வரும் வளர்பிறை துவாதிசி துளசி வழிபாட்டிற்கு சிறந்த தினமாக சொல்லப்படுகிறது. இந்த நாளில் நாம் ஓர் ஏழைக்கு அன்னதானம் செய்வது கங்கை கரையில் ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்த பலனை தரும்.

Tags :
|