- வீடு›
- வாழ்வியல் முறை›
- பாதாம் பருப்பை இப்படி சாப்பிடுங்கள்
பாதாம் பருப்பை இப்படி சாப்பிடுங்கள்
By: vaithegi Wed, 22 Nov 2023 4:11:34 PM
பாதாம் பருப்பை நாம் சாப்பிடுவதில் பல சந்தேகங்கள் இருக்கும். ஒரு சிலர் பாதாம் தோலில் விஷம் உள்ளது. அதை ஊற வைத்து தான் சாப்பிட வேண்டும் என கூறுகிறார்கள். சமூக வலைதளங்களிலும் பரவலாக பேசப்படுகிறது. இந்த சந்தேகத்தை போக்கக்கூடிய வகையில் இந்த பதிவு அமைந்துள்ளது.
கொட்டை வகைகளைச் சேர்ந்த பாதாம் பருப்பு சற்று விலை அதிகமாக இருப்பதால் இதன் சத்துக்களும் அதிகமாக இருக்கும் என மக்கள் கணிப்பில் பார்க்கப்படுகிறது. ஆனால் அப்படி ஒன்றும் இல்லை என பல மருத்துவர்கள் கூறுகின்றனர். அதற்கு இணையான சத்துக்கள் விலை மலிவான வேர்க்கடலையிலும் தேங்காயிலும் உள்ளது என கூறுகின்றனர்.
அதோடு சேர்த்து, புற்றுநோயை எதிர்க்கும் வைட்டமின்களும் பாதாமில் உள்ளது. மலச்சிக்கல், சுவாசக் கோளாறுகள், இருமல், இதயக் கோளாறுகள், சர்க்கரை நோய், சருமக் கோளாறுகள், கேசப் பிரச்சினைகள், சோரியாசிஸ், பல் பாதுகாப்பு, ரத்த சோகை, ஆண்மைக் குறைவு, பித்தப்பை கல் போன்ற பிரச்சினைகளைக் களைவதிலும் பாதாம் பருப்பு துணை புரிகிறது.
நிறைந்துள்ள சத்துக்கள்
கால்சியம், புரதம், ஒமேகா சத்துக்கள், விட்டமின் பி2, விட்டமின் ஈ, பொட்டாசியம் மாங்கனிசு, காப்பர் சத்துக்களை உள்ளடக்கியுள்ளது.
மூளை
மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது. ஞாபகத் திறனை மேம்படுத்துகிறது. இது மனித மூளைக்கு ஒரு சஞ்சீவியாகவே பார்க்கப்படுகிறது.
வயிறு
வயிற்றில் நல்ல பாக்டீரியாக்களை அதிகப்படுத்துகிறது. கழிவுகளை நீக்குகிறது.
முகம் மற்றும் கூந்தல்
விட்டமின் ஈ அதிகம் உள்ளதால் சருமத்திற்கு பயன்படுத்தப்படும் கிரீம்களில் இந்த பாதாம் ஆயிலாகா பயன்படுத்தப்படுகிறது. இது சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களை தடுத்து முதுமையை தள்ளிப் போடுகிறது.
கூந்தலுக்கு இதில் தயாரிக்கப்பட்ட பாதாம் எண்ணையை தடவி வந்தால் முடி உதிர்வதை தடுக்கலாம். கூந்தலில் ஏற்படும் புழுவெட்டுகளையும் சரி செய்யும்.
பாதாம் தோளில் இருக்கும் நன்மைகள்
பொதுவாக தோல் என்றாலே பல நன்மைகளையும் குறிப்பாக அதிக நார் சத்துக்களை கொண்டிருக்கும். அதுபோல்தான் பாதாமின் தோலும். வெளிநாடுகளில் பாதாம் மாவு மிகவும் பிரபலமானது. இந்த மாவு அரைக்கும் போது தோல் நீக்கி அரைக்கப்படும். இந்த மாவை பயன்படுத்தி கேக், பிஸ்கட் போன்றவை தயாரிக்கப்படும்.
இதை தோலுடன் அரைத்தால் ஒருவித நரநரப்பு போன்று இருக்கும். மேலும் தோலை நீக்கி செய்யும் போது அதன் சுவையும் அதிகமாக இருக்கும். இதற்காக மட்டுமே தோலை நீக்கி விடுகிறார்கள். ஆனால் இதனை நாம் விஷம் இருக்கும் போல என்று கருத்தில் கொண்டுள்ளோம்.
ஆனால் தோளில் தான் அதிக சத்துக்கள் உள்ளது. நார்ச்சத்து மற்றும் நல்ல பாக்டீரியாவை வளரச் செய்யக்கூடிய பிரீ பையாடி என்ற சத்து, பிளேவனாய்டு, பினாலிக் ஆசிட், ப்ரோ ஆன்த்ரோசைனின் போன்ற ஆன்ட்டி ஆக்சிடென் வகையைச் சேர்ந்த கெமிக்கல்கள் உள்ளது. மேலும் ஃபுட் பாய்சனை ஏற்படுத்தக்கூடிய பாக்டீரியாக்களை இந்த தோலில் உள்ள சத்துக்கள் தடுக்கிறது.
பாதிப்புகள்
நமக்கு அச்சம் ஏற்படும் அளவிற்கு பாதாம் தோலில் ஆபத்து ஒன்னும் இல்லை. ஒரு சில வயிற்று பிரச்சனைகள் மற்றும் வாய்வு பிரச்சனைகளை உண்டாக்கும். இதில் ஆக்சனேட்டுகள் அதிகமாக இருப்பதால் சிறுநீரக கற்கள் உள்ளவர்கள் பாதாம் பருப்பு எடுத்துக் கொள்வதை தவிர்க்கவும். உயர் ரத்த அழுத்தத்திற்கு மருந்து எடுத்துக் கொள்பவர்கள் சற்று கவனத்தில் கொண்டு எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு சிலர் உயிருக்கே ஆபத்து ஏற்படும் என சமூக வலைதளங்களில் பரப்பி விடுகிறார்கள். ஆகவே பாதாமை 1 நாள் ஒன்றுக்கு 5 பருப்பு வீதம் எடுத்துக் கொள்வது சிறப்பு. பொதுவாக கொட்டை வகைகளை நாம் அளவோடு தான் எடுத்துக் கொள்ள வேண்டும். அதுவே நம் ஆரோக்கியத்திற்கு மிக சிறந்தது.