Advertisement

குண்டாக இருப்பவர்கள் எடை குறைவாக தோற்றமளிக்க..!

By: Monisha Wed, 05 Aug 2020 5:31:12 PM

குண்டாக இருப்பவர்கள் எடை குறைவாக தோற்றமளிக்க..!

உடல் எடை அதிகமாக உள்ளவர்கள், உடற்பயிற்சி மூலம் உடலைக் குறைக்கலாம்; அதற்கு, கடுமையான முயற்சி தேவை. ஆனால், குறிப்பிட்ட வகையான சில உடைகளை அணிவதன் மூலம், அவர்கள் எடை குறைவானவர்களாகத் தோற்றமளிக்கலாம்.

உடலின் எடை சரியாக இருந்த போதிலும், முகத்தில் அதிக தசைப் பிடிப்பு இருப்பதாலும், சிலர் குண்டாகத் தெரிவர். பெண்கள், முன்பகுதியில் உள்ள முடிக்கற்றை அடிக்கடி முகத்தில் விழும் வகையில், லூசாக விட்டு விடலாம் அல்லது போனி டெய்ல் முறையில் ஜடை பின்னிக் கொள்ளலாம். கோடு போட்ட உடை அணிவதாக இருக்கும் பட்சத்தில், செங்குத்தான கோடுகள் கொண்ட உடைகளை அணியலாம்.

இதன் மூலம், குண்டாக இருப்பவர்கள் ஒல்லியாகத் தெரிவர். பெரும்பாலும் ஒரே நிறமுடைய ஆடைகளை பேன்ட் – ஷர்ட் / டாப்ஸ் – பாட்டம் அணிவதன் மூலமும், குண்டாக இருப்பவர்கள் தங்களை அழகாக்கி கொள்ள முடியும்.

obesity,t-shirts,chudidars,girls,fashion ,உடல் பருமன்,உடைகள்,சுடிதார்,பெண்கள்,பேஷன்

குள்ளமாக, குண்டாக இருப்பவர்கள், வழுவழுப்பான உடைகளை கண்டிப்பாக தவிர்த்தே ஆக வேண்டும். இவ்வகை உடைகள், இன்னும் உயரம் குறைந்தவர்களாகக் காட்டும். குள்ளமாக, குண்டாக உள்ள பெண்கள், சுடிதார் அணியும் போது, கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம்; தொளதொளவென்று அணியக் கூடாது. அதே போல், ரொம்ப இறுக்கமாகவும், இடுப்பு பகுதியில் அளவு குறைத்து, ஓரளவாவது ஸ்ட்ரக்சர் கொண்டு வரும்படி இருக்க வேண்டும்.

ரொம்ப இறுக்கமாக இருந்தால், பின்புறம் அசிங்கமாகத் தெரியும். எனவே, இடைப் பகுதியில் கவனமெடுத்து சுடிதார் அணிய வேண்டும். லூசான உடைகளை அணியக் கூடாது.

Tags :
|