Advertisement

துர்கா பூஜைக்கான ஷூ ட்ரெண்ட்டை தெரிந்துகொள்ளுங்கள்!!

By: Monisha Mon, 19 Oct 2020 2:27:48 PM

துர்கா பூஜைக்கான ஷூ ட்ரெண்ட்டை தெரிந்துகொள்ளுங்கள்!!

துர்கா பூஜையின் போது வெறுமனே உங்களை அழகுபடுத்தினால் மட்டும் போதாது. இந்த துர்கா பூஜைக்கு நிறைய விதவிதமான ஸ்டைலில் ஷூ கலெக்ஷனும் வந்துள்ளது. உங்கள் துர்கா பூஜைக்கான ஷூ ட்ரெண்ட்டை தெரிந்துகொள்ள இந்த பதிவு உங்களுக்கு உதவிகரமாக இருக்கும்.

ஒயிட் ஸ்னீக்கர்ஸ்
ஒயிட் ஸ்னீக்கர்ஸ் ஷூ தான் தற்போதைய ட்ரெண்டாக இருக்கிறது. இந்த வகை ஷூ உங்களுக்கு ஒரு கூல்லான லுக்கை கொடுக்கும். இந்த துர்கா பூஜையின் ஒரு நாளாவது இந்த ஒயிட் ஸ்னீக்கர்ஸ் இல்லாமல் வீட்டை விட்டு வெளியே வராதிங்க. இது உங்களுக்கு கூல்லான லுக்குடன் ரெம்ப செளகரியமாகவும் இருக்கும். இந்த ஷூ பெண்களுக்கு மட்டும் இல்லாமல் ஆண்களுக்கும் இருப்பதால் எல்லாருமே ஒரு கலக்கு கலக்கலாம். இதில் உங்களுக்கு பிடித்தமான டிசைனுள்ள ஒயிட் ஸ்னீக்கர்ஸ்ம் எடுத்து கொள்ளலாம். அது இன்னமும் உங்களை அழகாக காட்டும்.

pooja,shoe trend,white sneakers,bling shoe,gladiators ,பூஜை,ஷூ ட்ரெண்ட்,ஒயிட் ஸ்னீக்கர்ஸ்,பிளிங் ஷூ,கிளாடியேட்டர்ஸ்

பிளிங் ஷூ
பிளிங் ஷூ ஒரு புதிய வரவு காலணி ஆகும். இது ஒரு ஜொலிக்கும் ஸ்டைலில் ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும் அணியும் விதத்தில் கிடைக்கின்றன. இந்த ட்ரெண்ட் ஆயிரம் ஆண்டுகளாக போற்றப்படுகின்றனர். எனவே இப்படிப்பட்ட அழகிய ட்ரெண்ட்டை துர்கா பூஜையின் போது மறந்து விடாதீர்கள்.

ஷாக் பூட்ஸ்
இந்த வகையான காலணிகள் வட நாடுகளில் தான் முதலில் ட்ரெண்ட்டாக இருந்தது. இதில் ஒரு சந்தோஷமான விஷயம் என்னவென்றால் இந்த ஷாக் பூட்ஸ் இப்பொழுது இந்தியாவிற்கும் வந்து விட்டது. வருகின்ற துர்கா பூஜையில் இந்த ஷாக் பூட்ஸ் அணிந்து ஒய்யாரமாக நடந்து செல்ல மறந்து விடாதீர்கள்.

ரெயின்போ டஸிஸில்டு ஷேன்டல்ஸ்
இந்த ஸ்டைல் ட்ரெண்ட் பொதுவாக இந்தியாவில் தான் காணப்படுகிறது. இந்த ரெயின்போ காலணி வர்ணங்களின் கலவையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள ஷேன்டல் கலர் (சந்தனக் கலர்) உங்களுக்கு பாரம்பரிய மற்றும் மாடர்ன் லுக் இரண்டையுமே கொடுக்கும்.

pooja,shoe trend,white sneakers,bling shoe,gladiators ,பூஜை,ஷூ ட்ரெண்ட்,ஒயிட் ஸ்னீக்கர்ஸ்,பிளிங் ஷூ,கிளாடியேட்டர்ஸ்

ஹிட்டன் ஹீல்ஸ்
சின்ன உயரமான ஹீல்ஸ் டைப் தான் இந்த ஹிட்டன் ஹீல்ஸ். பெண்கள் பூஜை கொண்டாட்டத்திற்கு இந்த ஹீல்ஸ் வகைகளை மிகவும் விரும்புவர். ஏனெனில் பாதங்களில் அழுத்தம் குறைவாக இருப்பதால் ஹீல்ஸ் வகைக்கு அவர்கள் முக்கியத்துவம் கொடுப்பர். அதே நேரத்தில் எல்லா இடங்களிலும் இந்த ஹீல்ஸ் காலணிகளை போட்டு அலையாதீர்கள். இந்த ட்ரெண்ட் பெங்காலி பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று.

கிளாடியேட்டர்ஸ்
கிளாடியேட்டர்ஸ் ட்ரெண்ட் பேஷன் உலகில் திரும்பவும் வந்து ஒரு கலக்கு கலக்கி கொண்டு இருக்கிறது. இந்த பூஜைக்கு இந்த ட்ரெண்ட் மிகவும் பொருத்தமாக இருக்கும். இந்த காலணி உங்களுக்கு செளகரியமாக இருப்பதோடு உங்களுக்கு செக்ஸியாகவும் இருக்கும். உயரமான பெண்கள் பொதுவாக இந்த காலணி யை விரும்புவார்கள். ஏனெனில் இது அவர்கள் கால்களின் உயரத்தை காட்டும். குட்டையான பெண்களுக்கு இது நன்மையாக இருக்காது

Tags :
|