Advertisement

வயிற்றுப்புழுக்களை எளிமையான முறையில் வெளியேற்ற சில யோசனைகள்

By: Nagaraj Tue, 25 Oct 2022 11:28:19 PM

வயிற்றுப்புழுக்களை எளிமையான முறையில் வெளியேற்ற சில யோசனைகள்

சென்னை: வயிற்றில் புழுக்கள் இருப்பது ஒரு பொதுவான பிரச்சனை தான். மோசமான வாழ்க்கை முறை, கெட்டுப் போன உணவை உண்பது, சாப்பிடுவதற்கு முன் கைகளை சுத்தம் செய்யாமல் இருப்பது மற்றும் அசுத்தமான நீரைக் குடிப்பது போன்றவற்றால் வயிற்றில் புழுக்கள் உருவாகின்றன.

இதனால் அடிக்கடி வயிற்றில் திடீர் வலி, பசியின்மை, வாந்தி, குமட்டல் போன்ற பிரச்சனைகளை சந்திக்க கூடும். எனவே இவற்றை எளிய முறையில் போக்க ஒரு சில எளிய வழிகள் உள்ளன.

1/2 டீஸ்பூன் நாட்டுச் சர்க்கரையுடன், 1/2 டீஸ்பூன் செலரி பவுடர் சேர்த்து கலந்து, அதை ஒரு நாளைக்கு 3 முறை சாப்பிட வேண்டும். விருப்பமுள்ளவர்கள், இத்துடன் ஒரு சிட்டிகை ப்ளாக் சால்ட, 1/2 டீஸ்பூன் ஓமம் சேர்த்து கலந்து உட்கொண்டு வெதுவெதுப்பான நீரைக் குடியுங்கள். இப்படி இரவு தூங்கும் முன் செய்தால் வயிற்றில் உள்ள புழுக்கள் அழிந்துவிடும்.

வேப்பிலையை அரைத்து, அத்துடன் சிறிது தேன் சேர்த்து கலந்து, வெறும் வயிற்றில் உட்கொண்டு வந்தால், வயிற்றில் உள்ள புழுக்கள் அழிந்துவிடும். கேரட்டை தினமும் 2 வேளை சாப்பிட்டு வந்தால், அது வயிற்றில் உள்ள புழுக்களை மலத்தின் வழியாக எளிதில் வெளியேற்ற உதவும்.

basil leaves,excreted,lobster,simple ways,stomach worm ,எளிய வழிகள், ஓமம், துளசி இலைகள், வயிற்றில் புழு, வெளியேறிவிடும்

பப்பாளியின் விதைகளை அரைத்து, அதை பாலுடன் சேர்த்து கலந்து குடித்து வர, வயிற்றில் உள்ள புழுக்கள் அழியும். இல்லாவிட்டால், பாப்பாளியின் இலைகளை சுடுநீரில் போட்டு கொதிக்க விட்டு, அதை வடிகட்டி குடித்து வருவதன் மூலமும் வயிற்றுப் புழுக்களை அழிக்கலாம்.

ஓம விதைகளை அரைத்து பேஸ்ட் செய்து, சிறிது வெல்லத்தை சேர்த்து சிறு உருண்டைகளாக உருட்டி குழந்தைகளுக்கு சாப்பிட கொடுக்கலாம். பூண்டை அரைத்து, அதில் கல் உப்பு சேர்த்து கலந்து, ஒரு நாளைக்கு இரண்டு முறை உட்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் பூண்டு பால் கூட குடிக்கலாம். இவ்வாறு செய்தால், குழந்தைகள் மட்டுமின்றி, பெரியோர்களின் வயிற்றில் உள்ள புழுக்களும் அழிந்துவிடும்.

Tags :