Advertisement

ஆண்களே உங்கள் வசீகரத்தை மேம்படுத்திக் கொள்ள சில யோசனைகள்

By: Nagaraj Mon, 18 May 2020 8:47:51 PM

ஆண்களே உங்கள் வசீகரத்தை மேம்படுத்திக் கொள்ள சில யோசனைகள்

வசீகரமான தோற்றத்தை பெற ஆண்கள் என்ன செய்யலாம். இதோ உங்களுக்காக ஐந்து விஷயங்கள். இதை பின்பற்றி பாருங்கள். உங்கள் வசீகரம் மேம்படும்.

நம் மீது நல்ல ஒரு அபிப்பிராயத்தை உண்டாக்குவது நம்முடைய தோற்றம் தான். நாம் பேசும் சொற்களை விட நம்முடைய உடல் மொழி நம்மை பற்றி ஒரு பிம்பத்தை ஏற்படுத்தும். உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுக்கிறீர்களோ அதே அளவு முக்கியத்துவத்தை உங்கள் வெளி தோற்றத்திற்கும் கொடுக்க வேண்டும்.

ஆண்களுக்கு எப்போதும் அதிகப்படியாக வியர்வை ஏற்படும். சுத்தமாக முகத்தை பராமரிக்கா விட்டால் அதுவே நம் முகத்தை கெடுக்கும் விதமாக பருக்களை உண்டாக்கும். எனவே சரியான முறையில் முகத்தை பராமரிக்க வேண்டும்.

men,charm,ideas,sunscreen,beauty ,ஆண்கள், வசீகரம், யோசனைகள், சன்ஸ்கிரீன், அழகு

ஆண்களின் அழகில் முக்கிய பங்கு வகிப்பது தலைமுடி. நீங்கள் பயன்படுத்தும் ஷாம்பூவில் அதிகப்படியான வைட்டமின் E இருக்கிறதா என்பதை பார்த்து வாங்குங்கள். ஏனெனில் வைட்டமின் E தான் முடியின் வேர்க்கால்களுக்கு வலு சேர்க்கும். அதிக வாசனை தரக்கூடிய ஷாம்பூவை தவிர்க்கவும்.

ஆண்களின் அன்றாட பிரச்சனைகளில் ஒன்றாக மாறி விடுகிறது ஷேவிங். தொடர்ந்து ஷேவிங் செய்து வர வேண்டும். ஆனால் அது செய்த பிறகு ஏற்படும் அரிப்பு, நிறம் மாறுதல் போன்ற அசௌகரியங்களால் பல சங்கடங்களை சந்திக்க நேரிடும். இவற்றை தடுக்க முதலில் தாடியை சூடான நீரில் நனைத்து கொள்ளுங்கள். சிறிது நேரம் கழித்து ஷேவிங் கிரீம் தடவி ஷேவ் செய்யுங்கள்.

வெயில் படும் இடங்களில் சன்ஸ்கிரீன் தடவ வேண்டியது அவசியம். SPF ரேட்டிங் குறைந்த அளவிலான சன்ஸ்கிரீனை பயன்படுத்துங்கள். வெயிலில் செல்வதற்கு 15 நிமிடங்களுக்கு முன்னதாகவே சன்ஸ்கிரீனை தடவி கொள்ளவும்.

வாரத்தில் ஒரு முறையாவது காது மற்றும் மூக்கில் வளரும் முடிகளை நீக்கி விடுங்கள். டிரிம்மர் பயன்படுத்தி இந்த முடிகளை எடுப்பது நல்லது. ஏனெனில் ரேசர் பயன்படுத்தும் போது அதனால் காயம் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.

Tags :
|
|
|