Advertisement

Whatsapp செயலில் வரும் மோசடி அழைப்புகளை எவ்வாறு தவிர்க்கலாம்

By: vaithegi Sun, 23 July 2023 10:48:13 AM

Whatsapp செயலில் வரும் மோசடி அழைப்புகளை எவ்வாறு தவிர்க்கலாம்

இந்தியா: மக்கள் பலர் வாட்ஸ்ஆப் செயலிகளை அதிகம் பயன்படுத்தி கொண்டு வருகின்றனர். இதையடுத்து இதில் பல நன்மைகள் இருந்தாலும் ஆன்லைன் மோசடிகளும் அதிகமாக தான் இருக்கிறது. பலர் உள்நாட்டில் இருந்து கொண்டே வெளிநாட்டு எண் மூலம் மக்களை மோசடி செய்கின்றனர்.

அதனால் மோசடிகளை தடுக்க AI மற்றும் Machine Learning பயன்படுத்தி தற்போது ‘Silence Unknown Callers’ வசதியை அறிமுகம் செய்து உள்ளது. இதனை அடுத்து இந்த வசதி ஆன்லைன் மோசடிகளை தவிர்க்கவே தொடங்கப்பட்டு உள்ளது.

whatsapp,call ,Whatsapp ,அழைப்பு


எனவே இதன் மூலம் நமக்கு வரும் தேவை இல்லாத அழைப்புகளை கட்டுப்படுத்தலாம். இதற்கு முன்பே Spam, Scam போன்ற அழைப்புகளுக்கு ஸ்க்ரீன் பாதுகாப்பு இருந்தாலும் இது கூடுதல் பாதுகாப்பு கருவியாக இருக்கும்.மேலும் இவ்வசதியை நாம் Activate செய்தவுடன் நமது போனின் பதிவில் இல்லாத எண்களிலிருந்து ஏதேனும் அழைப்புகள் வந்தால் உடனடியாக Silence செய்யப்படும். அந்த அழைப்புகளுக்கு ரிங் வராது Missed calls நோட்டிபிகேஷன் காட்டும்.

பயன்படுத்தும் முறை:

முதலில் Whatsapp திறக்க வேண்டும். அதில் settings உள்ளே செல்ல வேண்டும்.
பின் Privacy பக்கத்திற்கு சென்று Calls பட்டனை திறக்க வேண்டும்.
அதில் Silence Unknown Callers ஆப்ஷன் ஒன்று இருக்கும். அதை அழுத்தியவுடன் உடனடியாக உங்களுக்கு இந்த பாதுகாப்பு வசதி Activate செய்யப்படும்.
இந்த வசதி Android மற்றும் ஐபோன் இரண்டிலும் வரும்.

Tags :