Advertisement

பட்டு புடவைகளுக்கு மேலும் அழகூட்டும் பிளவுஸ்களை தேர்வு செய்வது எப்படி?

By: Monisha Fri, 21 Aug 2020 4:01:48 PM

பட்டு புடவைகளுக்கு மேலும் அழகூட்டும் பிளவுஸ்களை தேர்வு செய்வது எப்படி?

பட்டு புடவை என்றாலே, அதற்கு ஒரு தனித்துவம் உள்ளது. இந்த பட்டு புடவைகளை பிடிக்காத பெண்களே இல்லை என்று கூறலாம். மற்ற புடவைகளை விட, பட்டு புடவைகளுக்கு எப்போதும் சிறப்பான வரவேற்பு உள்ளது. பல நிறங்களிலும், வடிவங்களிலும், மற்றும் ராகங்களிலும் பட்டு புடவைகள் கிடைகின்றன. ஆனால், இந்த பட்டு புடவைகளுக்கு மேலும் அழகூட்டும் விதமாக அதற்கு ஏற்ற பிளவுஸ் தேர்வுகளும் மிக முக்கியமான ஒன்றாகும். நீங்கள் அணியும் பட்டு புடவை உங்களுக்கு அழகாகவும், நல்ல தோற்றத்தை தருவதாகவும் இருக்க வேண்டும் என்றால், நீங்கள் சரியான பிளவுஸ்களையும் தேர்வு செய்ய வேண்டும்.

இன்று கடைகளில் பல வகைகளிலும், ரகங்களிலும் பிளவுஸ்கள் பட்டு புடவைகளுக்கு கிடைகின்றன. அவற்றில் சிறந்த ஒன்றையும், உங்களுக்கு ஏற்ற ஒன்றையும் தேர்வு செய்ய இங்கே உங்களுக்காக சில டிப்ஸ்!

நீங்கள் தேர்வு செய்யும் பிளவுஸ் பட்டு புடவையின் டிசைனுக்கு ஏற்றதாக இருக்க வேண்டும். பிளவுஸ்சின் நிறம் பட்டு புடவையின் நிறத்திற்கு ஏற்றதாக இருக்க வேண்டும். மாறுபட்டு இருக்கக் கூடாது. நீங்கள் தேர்வு செய்யும் பிளவுஸ் எளிமையாக இருக்க வேண்டுமா அல்லது ஆடம்பரமாக இருக்க வேண்டுமா என்று தீர்மானம் செய்யுங்கள். புடவையில் இருக்கும் டிசைனுக்கு ஏற்றவாறு பிளவுஸ் டிசைனும் இருக்க வேண்டும்.

silk sarees,blouses,design,fashion,embroidery ,பட்டு புடவை,பிளவுஸ்,டிசைன்,பேஷன்,எம்ப்ரைடரிங்

நீங்கள் கனமான பட்டு புடவையை தேர்வு செய்திருந்தால், பிளவுஸ்சின் கழுத்து பகுதி எளிமையாக இருக்க வேண்டும். கைகளில் வேலைப்பாடுகள் செய்யப்பட்ட பிளவுஸ் பட்டு புடவைக்கு ஏற்ற தேர்வாக இருக்கும். பாரம்பரிய டிசைன் முதல் நவீன டிசைன்கள் வரை உங்கள் பட்டு புடவை பிளவுஸ்சுக்கான டிசைன்களை நீங்கள் தேர்வு செய்யலாம். நீங்களாகவே வடிவமைக்கலாம்.

அதிக எம்ப்ரைடரிங் செய்யப்பட்ட பிளவுஸ் சில சமயங்களில் அசௌகரியமாக இருக்கக் கூடும். அதனால், தேவைக்கேற்ப குறைந்த எம்ப்ரைடரிங் வேலைப்பாடு இருக்கும் பிளவுஸ்சை தேர்வு செய்வது நல்லது. விரிந்த தோள்கள் உடையவர்களாக நீங்கள் இருந்தால், நன்கு விரிந்த கழுத்து வடிவமைப்பை தேர்வு செய்ய வேண்டும். மேலும் ஓரங்களில் பட்டை போன்ற பைபிங் தருவது அழகாக இருக்கும்.

silk sarees,blouses,design,fashion,embroidery ,பட்டு புடவை,பிளவுஸ்,டிசைன்,பேஷன்,எம்ப்ரைடரிங்

சற்று மெல்லிய உடலமைப்பு உடையவர்கள் நீண்ட கைகள், மெல்லிய ஸ்டராப் மற்றும் விரிந்த கழுத்து வடிவமைப்பை வைத்து பிளவுஸ்சை வடிவமைக்கலாம். தடிமமான கைகளை உடையவர்கள் கை இல்லாத பிளவுஸ்களை தவிர்ப்பது நல்லது. நீண்ட கைகளை உடையவர்கள் முக்கால் அல்லது முழு நீல கைகளை கொண்ட பிளவுஸ்களை அணியலாம்

உடல் பருமனாக இருப்பவர்கள், தொப்பையை மறைக்க, சற்று நீளமான பிளவுஸ்களை வடிவமைக்கலாம். இது சற்று அழகான தோற்றத்தையும் உங்களுக்குத் தரும். ரெடி மேட் பிளவுஸ் வாங்கப் போகின்றீர்களா அல்லது உங்கள் விருப்பத்திற்கு ஏற்பா தைக்க போகின்றீர்களா என்பதை தீர்மானம் செய்ய வேண்டும். நீங்கள் அணியும் பிளவுஸ் உங்களுக்கு சௌகரியமாக இருக்க வேண்டும்.

Tags :
|