Advertisement

லெதர் ஷூக்களைப் பராமரிப்பது எப்படி?

By: Monisha Sat, 12 Sept 2020 5:44:45 PM

லெதர் ஷூக்களைப் பராமரிப்பது எப்படி?

விதவிதமான காலணிகளை விரும்பாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். வெவ்வேறு வண்ணங்களில், வேறுவேறு டிசைன்களில் காலணிகளை வாங்கி நிரப்பும் பழக்கம் நம்மில் பலருக்கும் உண்டு. ஆனால் கால் மற்றும் முதுகுவலிக்கும் நாம் அணியும் செருப்புகளுக்கும் நிறைய சம்மந்தம் இருக்கிறது. காலின் விரல் பகுதிக்கும் குதிகாலுக்கும் எந்தவித மாற்றமும் இல்லாத தட்டையான காலணிகளைத் தேர்வு செய்யாதீர்கள்.

காலணிகள் வாங்கும்போது, காலை செருப்புக்குள் நுழைத்துப்பாருங்கள். காலின் உட்பகுதி முழுவதும் உள்ளே இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். அப்படி பார்த்து வாங்கினாலே முதுகு வலி மற்றும் கால் வலி வராமல் தவிர்க்க முடியும்.

பருவ காலங்களுக்கு ஏற்றபடி காலணிகளை பராமரிப்பது தான் சவாலான வேலை. குறிப்பாக, மழைக்காலங்களில் காலணிகளை பத்திரமாகப் பார்த்துக் கொள்வதில் இருக்கும் சிரமங்கள் சொல்லி மாளாது. அதற்கு வழிதான் என்ன? அதிலும் குறிப்பாக, லெதர் ஷூக்களைப் பராமரிப்பது மிகக் கடினமான ஒன்று. அப்படி நீங்கள் ஆசை ஆசையாக வாங்கிய லெதர் ஷூக்களை எப்படி பராமரிக்க வேண்டும்?

leather shoe,season,footwear,design,polish ,லெதர் ஷூ,பருவ காலம்,காலணி,டிசைன்,பாலீஷ்

காலணிகளில் உள்ள கலரும் அதன் மேல் தோலும் உரிந்து கொண்டே வரும். அதை அப்படியே விட்டுவிட்டால், மேலும் சேதத்தை ஏற்படுத்திக் கொண்டே இருக்கும். அதை உரித்து எறிந்துவிட்டு, மழைக்காலங்களில், குறிப்பிட்ட கால இடைவெளிகளில் ஃபிரஷ்ஷிங் செய்யுங்கள்.

மழைக்காலங்களில் சேறிலும் தண்ணீரிலும் பட்டு, காலணிகள் ஈரமாகவே இருக்கும். அதை அப்படியே வைத்திருக்கும் போது, துர்நாற்றம் வீசக்கூடும். அதனால், வெயில் நேரங்களில் எடுத்து வெளியே வைத்து, நன்கு உலர்த்த வேண்டும். விலையுயர்ந்த லெதர் காலணிகளை, அடிக்கடி பாலீஷ் செய்து கொண்டே இருக்க வேண்டும். அப்படி செய்வதால், அவை புதுசு போன்ற தோற்றத்தைக் கொடுக்கும்.

காலணிகளில் உள்ள கறைகள் மற்றும் தூசிகளைப் போக்க, ஸ்கார்ட்ச்கார்டு ஸ்பிரேவை அடிக்கடி பயன்படுத்துங்கள். தண்ணீருக்குள் போட்டு, கழுவும் பழக்கத்தைக் கைவிடுங்கள். ஸ்பிரே பயன்படுத்துவதால், வெகுநாட்களுக்கு அவை புதுசுபோல் மின்னும்.

Tags :
|
|