Advertisement

எறும்புத் தொல்லை அதிகமாக இருக்கா... தீர்வுக்கு சில வழிகள்

By: Nagaraj Fri, 11 Nov 2022 11:12:38 PM

எறும்புத் தொல்லை அதிகமாக இருக்கா... தீர்வுக்கு சில வழிகள்

சென்னை: உங்க வீட்டில் எறும்பு தொல்லை அதிகமாக இருக்கா. எப்படி விரட்டலாம் என்பதை தெரிந்து கொள்வோம் வாங்க.

பொதுவாக நம்முடைய சமையலறையை எவ்வளவு சுத்தமாக வைத்திருந்தாலும் சிறிது சாதம் கொட்டினாலோ அல்லது இனிப்பு பண்டங்கள் சிதறினாலோ எறும்புகள் எங்கிருந்து தான் வருமோ தெரியாது கொஞ்ச நேரத்தில் படையெடுக்க ஆரம்பித்து விடும்.

இந்த எறும்பு தொல்லை பிரச்சினையானது எல்லோருடைய வீட்டிலும் பொதுவான ஒரு பிரச்சனையாகும். இதனை சரி செய்ய கடைகளில் பல வகையான மருந்துகள் கிடைக்கிறது. இருப்பினும் நம்முடைய வீட்டில் உள்ள சில பொருட்களை வைத்தே எறும்பை எப்படி விரட்டலாம் என்று தெரிந்து கொள்வோம்.

சில நேரங்களில் வீட்டில் சிறிய குழந்தைகள் இருக்கும் பொழுது எறும்பு கொடியை பயன்படுத்த முடியாது. எனவே அந்த மாதிரியான சமயங்களில் இயற்கை முறையில் எறும்பை விரட்டலாம். சமையலறையில் வைத்திருக்கும் குப்பையையும் உடனே அப்புறப்படுத்தி விடுவது நல்லது.

ant,acidity,caustic pepper,white vinegar,irritation ,எறும்பு, அமிலத்தன்மை, மிளகு காரம், ஒயிட் வினிகர், எரிச்சல்

செல்லப்பிராணிகள் வைத்திருந்தால் அதன் உணவு பாத்திரங்களையும் கழுவி சுத்தமாக வையுங்கள்.

எறும்பு எந்த இடத்தில் இருக்கிறதோ அந்த இடத்தில் கொதிக்க கொதிக்க வெந்நீரை வைத்து அதில் ஊற்றலாம். இந்த சூட்டில் எறும்புகள் அழிந்துவிடும். இருப்பினும் எறும்பு குழிகள் மிகவும் ஆழமானவை என்பதால் எல்லா எறும்புகளும் ஒட்டுமொத்தமாக அழியாது. ஆனால் எறும்புகள் மறுபடியும் அந்த பொந்தில் இருந்து வருவது தடுக்கப்படும்.

கண்ணாடி கிளின்சர் மற்றும் பாத்திரம் தேய்க்க பயன்படுத்தப்படும் லிக்யூட் சோப்பு இரண்டையும் ஒன்றாக கலந்து ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் எடுத்துக்கொண்டு எறும்பு வரும் இடத்தில் தெளிக்கலாம். சோப்பின் மனத்திற்கு எறும்புகள் தாங்காது ஓடிவிடும்.

எறும்புகள் போன பின் அந்த இடத்தை சுத்தமாக துடைத்து விடலாம். 50% ஒயிட் வினிகர் எடுத்து அதை ஸ்பிரே பாட்டிலில் எடுத்து அதனுடன் 50% தண்ணீரும் சேர்த்து எறும்பு வரும் இடத்தில் தெளித்தால் எறும்புகள் ஓடிவிடும். ஏனெனில் வினிகரில் உள்ள அமிலத்தன்மை எறும்புகளுக்கு பிடிக்காது.


அதேபோன்று எறும்புகளுக்கு மிளகுத்தூள் வாசனையானது எரிச்சல் ஊட்டக் கூடியது, எனவே எறும்பு வரும் இடங்களில் மிளகுத்தூளை தூவி வைக்கலாம் மிளகின் காரம் எறும்பு தொல்லையை விரட்டி விடும். பின்னர் எறும்பு அந்த பக்கம் கூட வராது.

Tags :
|