Advertisement

உடையின் நிறங்களில் இவ்வளவு சுவாரசியங்கள் உள்ளதா?

By: Monisha Thu, 11 June 2020 1:36:48 PM

உடையின் நிறங்களில் இவ்வளவு சுவாரசியங்கள் உள்ளதா?

அனைவரின் அழகிலும் முக்கிய பங்கு வகிப்பது உடைதான். எனவே 'ஆள் பாதி ஆடை பாதி' என்று கூறுவர். நாம் அணியும் உடையின் நிறத்தை பொறுத்தே நம் மனநிலையும் அமையும். ஒவ்வொரு இடத்திற்கும் ஏற்றவாறு உடை அணிய தெரிந்து கொள்ளவேண்டும். நீங்கள் அணியும் உடையின் நிறம் உங்கள் வாழ்க்கையில் எப்படி பாதிப்பை ஏற்படுத்துகிறது என்று தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்!

சிவப்பு
மற்றவர்களின் கவனத்தை பெற வேண்டுமா? அதற்கு நீங்கள் அணிய வேண்டியது சிவப்பு நிறத்தைதான். சிவப்பு நிறம் உங்களை வலிமையாக உணரச்செய்வதுடன் மற்றவர்களின் கவனத்தையும் உங்களுக்கு பெற்றுத்தரும். மேலும் இது உங்கள் காதல் உணர்வை அதிகரிக்கும், காதலர்களை பார்க்க செல்லும் போது சிவப்பு நிற உடை அணிந்து செல்லுங்கள். அதேசமயம் சிவப்பு நிறம் நம்முடைய சாப்பிடும் ஆசையை அதிகம் தூண்டும். எனவே ஆரோக்கியமாக சாப்பிட வேண்டும் என்று நினைப்பவர்கள் எச்சரிக்கையுடன் சிவப்பு நிறத்தை அணியுங்கள்.

dress,red,orange,yellow,green,white,black ,உடை,சிவப்பு,ஆரஞ்சு,மஞ்சள்,பச்சை,வெள்ளை,கருப்பு

ஆரஞ்சு
சிவப்பு நிறத்தை போலவே ஆரஞ்சு நிறமும் ஆற்றல் மற்றும் கவன ஈர்ப்பின் அடையாளமாக இருக்கிறது. ஆனால் தீவிர சிவப்பு போல் அல்லாமல் ஆரஞ்சு நிறம் மேலும் இனிமையான விளைவுகளை ஏற்படுத்தும். ஆனால் ஆரஞ்சு நிறம் பொதுவாக அனைவருக்கும் ஏற்றதாக இருக்காது, ஒருவேளை உங்களுக்கு ஆரஞ்ச் பொருத்தமான நிறமாக இருந்தால் அதை அடிக்கடி அணியுங்கள். உங்களுக்கு நேர்மறை ஆற்றலை இது அதிகம் வழங்கும்.

dress,red,orange,yellow,green,white,black ,உடை,சிவப்பு,ஆரஞ்சு,மஞ்சள்,பச்சை,வெள்ளை,கருப்பு

மஞ்சள்
உங்களின் நாள் மிகவும் மோசமானதாக இருந்தால் அதனை சரி செய்ய மஞ்சள் நிற ஆடையணிவது சிறந்த தேர்வாக இருக்கும். மஞ்சள் உத்வேகம் மற்றும் புத்திக்கூர்மையுடன் தொடர்புடையதாகும். எனவே ஏதவாது முக்கியமான தேர்விற்கோ அல்லது நேர்முக தேர்விற்கோ செல்லும் போது மஞ்சள் நிற ஆடையணிவது சிறந்தது.

dress,red,orange,yellow,green,white,black ,உடை,சிவப்பு,ஆரஞ்சு,மஞ்சள்,பச்சை,வெள்ளை,கருப்பு

பச்சை
பச்சை நிறம் எப்பொழுதும் அமைதி மற்றும் மென்மையின் அடையாளமாகும். அதுமட்டுமின்றி பசுமையை வெளிப்படுத்தும் நிறமாகும். பச்சை நிற உடையணிவது ஒருவரின் மனஅழுத்தத்தை குறைப்பதாக இருக்கும். எனவே நீங்கள் உடல் அளவிலும், மனதளவிலும் பலவீனமாக உணர்ந்தால் வெளியே செல்லும்போது பச்சை நிற உடையணிந்து செல்லவும்.

dress,red,orange,yellow,green,white,black ,உடை,சிவப்பு,ஆரஞ்சு,மஞ்சள்,பச்சை,வெள்ளை,கருப்பு

நீலம்
நீல நிறம் அமைதி மற்றும் வலிமையின் அடையாளமாக இருக்கிறது. அதிக மனசோர்வுடன் இருக்கும்போது நீல நிற உடையணிவது உங்களுக்கு நல்ல பலனை அளிக்கும். மேலும் நீல நிற உடையணிவது உங்களின் கற்பனைத்திறனை அதிகரிக்கும் என்று ஆய்வுகள் கூறுகிறது. எனவே வேலை தொடர்பாக வெளியே செல்லும்போது நீல நிற உடை அணிவது நல்ல பலனை அளிக்கும்.

dress,red,orange,yellow,green,white,black ,உடை,சிவப்பு,ஆரஞ்சு,மஞ்சள்,பச்சை,வெள்ளை,கருப்பு

வெள்ளை
வெள்ளை நிற உடையணிவது உங்கள் உடலை எப்பொழுதும் சூடாக வைத்திருக்க உதவும். மேலும் இது தூய்மை, எளிமை மற்றும் அமைதியை குறிப்பதாக இருக்கும். நீங்கள் அணிந்திருக்கும் மற்ற நிறத்தை அழகாக காட்ட வெள்ளை நிறத்தை அணியுங்கள். இது நீங்கள் அணியும் எந்த கலருடனும் பொருத்தமாக இருக்கும்.

dress,red,orange,yellow,green,white,black ,உடை,சிவப்பு,ஆரஞ்சு,மஞ்சள்,பச்சை,வெள்ளை,கருப்பு

கருப்பு
பொதுவாக கருப்பு என்பது அமங்கலமான நிறமாக கருதப்படுகிறது. அதேசமயம் பலருக்கும் பிடித்த நிறமாகவும் கருப்புதான் இருக்கிறது. ஆனால் உண்மையில் கருப்பு ஆற்றலின் நிறமாகும். நீங்கள் பதவி உயர்வுக்கோ அல்லது நேர்முக தேர்வுக்கோ செல்வதாக இருந்தால் கருப்பு நிற உடையை தாராளமாக அணிந்து செல்லலாம். ஏனெனில் கருப்பு நிறம் பொறுப்பு, அதிகாரம், தேடல் போன்றவற்றின் அடையாளமாக இருக்கிறது. மேலும் கருப்பு நிற உடை உங்களுக்கு கவர்ச்சியான தோற்றத்தை கொடுக்கும். மேலும் இது கம்பீரத்தின் அடையாளமாகவும் இருக்கும்.

dress,red,orange,yellow,green,white,black ,உடை,சிவப்பு,ஆரஞ்சு,மஞ்சள்,பச்சை,வெள்ளை,கருப்பு

பிங்க்
பிங்க் நிறம் பெண்களுக்கு பிடித்த நிறம் என்று நாம் நன்கு அறிவோம். ஆனால் இது காதல் மற்றும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் நிறமாகவும் இருக்கிறது. சுறுசுறுப்பாக இருக்க விரும்பும் போது இந்த நிற உடையை அணிய வேண்டாம் , ஏனெனில் இது அமைதியை ஏற்படுத்தும் நிறமாக இருக்கிறது. காதலர்களுடன் வெளியே செல்லும் போது இந்த நிற உடையை அணியுங்கள்.

Tags :
|
|
|
|
|
|