Advertisement

  • வீடு
  • வாழ்வியல் முறை
  • பண்டிகை, திருவிழா, திருமணத்திற்கு அசத்தலாக செல்ல உங்கள் சாய்ஸ் லெஹெங்கா-வாக இருக்கட்டும்

பண்டிகை, திருவிழா, திருமணத்திற்கு அசத்தலாக செல்ல உங்கள் சாய்ஸ் லெஹெங்கா-வாக இருக்கட்டும்

By: Nagaraj Wed, 03 June 2020 8:54:14 PM

பண்டிகை, திருவிழா, திருமணத்திற்கு அசத்தலாக செல்ல உங்கள் சாய்ஸ் லெஹெங்கா-வாக இருக்கட்டும்

பண்டிகையா, திருவிழாவா உங்கள் உடைகளை அனைவரும் கவனிக்க வேண்டுமா... அப்புறம் என்ன கலக்கல் ஆடைகளை அணிந்து அனைவரின் "போகஸ்" உங்கள் பக்கம் திரும்ப செய்யும் ஸ்பெஷல் ஆடைகள்.

ஒவ்வொரு பண்டிகை, திருவிழா மற்றும் விசேஷ காலங்களில் பெண்கள் அனைவரும் அணியப் பாரம்பரிய உடைகளைத் தான் தேர்ந்து எடுப்பார்கள். இப்போது பாரம்பரிய உடைகள் எல்லாம் நவீனக் காலத்திற்கு ஏற்ப மாறிவருகிறது. அதில் ஒன்று தான் லெஹெங்கா. இது நிச்சயமாக எல்லா பெண்களின் மனதிலும் ஒரு முக்கிய இடத்தைப் பெற்று உள்ளது என்பதில் சந்தேகமில்லை.

விழாக்களுக்கு நீங்கள் செல்ல போகிறீர்கள் என்றால் உங்களுக்கு நிச்சயமாக லெஹெங்கா மிகப் பொருத்தமாக இருக்கும். உங்கள் தோற்றத்திற்கு அழகினை சேர்க்கவும் மற்றவர்களின் கண்களைக் கவர்வதற்கு நீங்கள் லெஹெங்கா சோலியை அணியலாம். லெஹெங்காவில் பல வகைகள் உள்ளன. அதிலும் முக்கிய இடத்தை பிடித்து "டாப்" ஆக இருக்கும் லெஹெங்காக்கள் பற்றி உங்களுக்காக.

lehenga,saree,wedding ceremony,embroidery,crafts ,லெஹங்கா, சேலை, திருமண விழா, எம்பிராய்டரி, வேலைப்பாடுகள்

லெஹங்காவில் ஜாக்கெட் மட்டும் மிகவும் அதிக வேலைப்பாடுகளுடன் வடிவமைக்கப்பட்டு இருக்கும். எப்போதும் போல் லெஹெங்கா அணிந்து அதன் மேல் ஒரு நீண்ட வேலைப்பாடுகள் நிறைந்த ஜாக்கெட் அணிவதே ஜாக்கெட் ஸ்டைல் ​​லெஹெங்கா ஆகும். இதில் ஒரு சிக்கலான எம்பிராய்டரி வேலைப்பாடுகள் அல்லது மின்னும் கற்கள் கொண்ட வேலைப்பாடுகள் நிறைந்து இருக்கும். இந்த ஆடை அணியும் போது நீங்கள் தனித்து தெரிவீர்கள்.

சில பெண்கள் மற்றும் திருமணமான பெண்கள் லெஹங்கா அணியச் சற்று சங்கடமாக உணருவார்கள். அவர்களுக்காகச் சேலை லெஹங்கா என்று ஒன்று உள்ளது. இது அணியும்போது சேலை அணிந்தவாறு இருக்கும். சேலை கட்ட தெரியாத பெண்களும் சேலை கட்ட நேரம் எடுத்துக் கொள்ளும் பெண்களும் இந்த சேலை லெஹங்காவை அணிந்து திருமண விழாக்களில் அசத்தலாம்.

Tags :
|