Advertisement

  • வீடு
  • வாழ்வியல் முறை
  • ஆதார் அட்டை தொலைந்துவிட்டால் எப்படி புது அட்டையை பெறுவது என்பது குறித்து பார்ப்போம்

ஆதார் அட்டை தொலைந்துவிட்டால் எப்படி புது அட்டையை பெறுவது என்பது குறித்து பார்ப்போம்

By: vaithegi Mon, 09 Oct 2023 12:03:40 PM

ஆதார் அட்டை தொலைந்துவிட்டால் எப்படி புது அட்டையை பெறுவது என்பது குறித்து பார்ப்போம்

உடனே அப்ளை பண்ணுங்க ..இந்திய குடிமகனின் முக்கிய அடையாள அட்டையாக ஆதார்கார்டு விளங்கி கொண்டு வருகிறது. அதாவது, வங்கி கணக்கு துவங்குவதிலிருந்து அரசின் சலுகைகளை பெறுவது வரைக்கும் இன்றியமையாத ஆவணமாக இருந்து கொண்டு வருகிறது. இத்தகைய, ஆதார் கார்டு தொலைந்து போனால் எவ்வாறு புதிய ஆதார் கார்டினை பெறுவது என்பது பற்றிய அறிவிப்பை காணலாம்.

அதாவது, ஆதார் எண், பதிவு ஐடி, ஆதார் மெய்நிகர் ஐடி அல்லது ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் மூலமாகவே ஆதார் கார்டினை மீண்டும் பெறலாம். அதாவது, தொலைந்த ஆதாரை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் மூலமாக மீண்டும் பெறுவதற்கு இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI)அனுமதித்துவுள்ளது.

aadhaar card,privilege,unique identification authority of india ,ஆதார் அட்டை, சலுகை,இந்திய தனித்துவ அடையாள ஆணையம்

மேலும் இ ஆதார் பெறுவதற்கு UIDAI இணையதளமான myaadhaar.uidai.gov.in/ என்கிற பக்கத்துக்குச் செல்லவும். அதன் பின்னர், Download aadhaar என்பதைக் கிளிக் செய்து ஆதார் எண் மற்றும் கேப்ட்சா குறியீட்டை பதிவு செய்யவும்.

அதன் பின், பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு அனுப்பப்பட்டு உள்ள OTP எண்ணை பதிவு செய்து submit கொடுக்கவும். இதன் பின்னர், இ-ஆதாரை PDF வடிவத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், ஆதார் அட்டையை PVC ஆதார் அட்டையாக மாற்றுவதற்கு ஆதார் இணையதள பக்கத்திற்கு சென்று ரூ. 50 கட்டணம் செலுத்தி PVC ஆதார் அட்டையை ஆர்டர் செய்துகொள்ளலாம்.

Tags :