Advertisement

  • வீடு
  • வாழ்வியல் முறை
  • ஆதாரில் உங்களுடைய மொபைல் எண்ணை எப்படி அப்டேட் செய்வது என்பது பற்றி பார்ப்போம்

ஆதாரில் உங்களுடைய மொபைல் எண்ணை எப்படி அப்டேட் செய்வது என்பது பற்றி பார்ப்போம்

By: vaithegi Sun, 01 Oct 2023 2:03:22 PM

ஆதாரில் உங்களுடைய மொபைல் எண்ணை எப்படி அப்டேட் செய்வது என்பது பற்றி பார்ப்போம்


சென்னை: எளிய வழிமுறைகள் ...இந்திய மக்களுக்கு அடிப்படை ஆவணங்களில் ஒன்றாக ஆதார் எண் இருக்கிறது. இதையடுத்து அதில் உள்ள விவரங்கள் அவ்வப்போது அப்டேட் செய்து வைத்திருப்பது அவசியம் ஆகும். இந்த நிலையில் ஆதாரில் உங்களுடைய மொபைல் எண்ணை எப்படி மாற்றுவது என்பது பற்றி இந்த பதிவில் பார்ப்போம் .

மொபைல் எண்ணை ஆன்லைன் மூலமாகவோ அல்லது ஆப்லைன் மூலமாகவோ மாற்றலாம். மொபைல் எண்னை மாற்ற முதலில் ஆதார் பதிவு மையத்திற்கு செல்ல வேண்டும்.

update,aadhaar ,அப்டேட் ,ஆதார்

அங்கு ஆதார் புதுப்பிப்பு அல்லது திருத்தப் படிவத்தை எடுத்து உங்கள் மாற்றப்பட்ட மொபைல் எண் உட்பட அனைத்து விவரங்களையும் நிரப்பவும் அனைத்து விவரங்களையும் மீண்டும் சரிபார்த்த பின், உங்கள் படிவத்தை ஆதார் நிர்வாகியிடம் சமர்ப்பிக்க வேண்டும். உங்கள் விழித்திரை ஸ்கேன் மற்றும் கைரேகைகள் உட்பட உங்கள் பயோமெட்ரிக்ஸை வழங்குவதன் மூலம் உங்கள் விவரங்களை அங்கீகரிக்க வேண்டும்.

அதன் பின் ஆஃப்லைன் சேவைக்கு நீங்கள் 50 ரூபாய் செலுத்த வேண்டும். படிவத்தைச் சமர்ப்பித்து பணம் செலுத்தியதும், உங்களின் புதுப்பிப்பு கோரிக்கை எண் (URN) இருக்கும் ஒப்புகை சீட்டு உங்களுக்கு வழங்கப்படும். உங்களுடைய மொபைல் எண் அப்டேட் செய்யப்பட்டதை URNயை பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம். மேலும் அடுத்த 30 நாட்களுக்குள் உங்கள் மொபைல் எண் புதுப்பிக்கப்படும்.

Tags :
|