Advertisement

பூஜை பொருட்கள் எப்போதும் பளபளப்பாக மின்ன வேண்டுமா!!!

By: Nagaraj Tue, 25 Oct 2022 11:43:26 PM

பூஜை பொருட்கள் எப்போதும் பளபளப்பாக மின்ன வேண்டுமா!!!

சென்னை: வீட்டில் வெள்ளிக்கிழமை, நல்ல நாள், அமாவாசை, பௌர்ணமி என கடவுளை வழிபடும் முக்கிய நாட்களில் பூஜையறையையும், பூஜை பாத்திரங்களையும் சுத்தம் செய்வதை பெண்கள் வழக்கமாக கொண்டிருப்பார்கள். பூஜை பாத்திரங்கள் பளபளப்பாக இருக்க சில யோசனைகள்.

பூஜை சம்பந்தமான விஷயங்களை செய்யும் பொழுது மிகவும் கவனமாக செய்ய வேண்டும். வீட்டை சுத்தம் செய்வது, பூஜை அறையை சுத்தம் செய்வது, பூஜை பாத்திரங்களை சுத்தம் செய்வது போன்ற வேலைகளை வெள்ளிக்கிழமை மற்றும் செவ்வாய் கிழமையில் செய்வது என்பதை தவிர்த்து விட வேண்டும். அப்படி வெள்ளிக்கிழமை மற்றும் செவ்வாய் கிழமையில் செய்தால் நமது வீட்டில் உள்ள அதிர்ஷ்ட தேவை வெளியேறி விடுமாம். எனவே இது போன்ற தினங்களில் பூஜை செய்ய வேண்டிய வேலை இருந்தால் அதற்கு ஒரு முதல் நாளே சுத்தம் செய்யும் வேலைகளை முடித்து வைத்தல் நல்லது.

முதலில் பூஜை பாத்திரங்களை சுத்தம் செய்வதற்கு முன்னர் அவற்றில் இருக்கும் எண்ணெய் பிசுக்குகளை ஒரு துணி வைத்து துடைத்துக் கொள்ளவேண்டும். பின்னர் இவை அனைத்தையும் ஒரு அகன்ற பாத்திரத்தில் வைத்து, அந்த பாத்திரங்கள் மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி எலுமிச்சைப்பழ அளவு புளியை அதில் கரைத்துவிட வேண்டும்.

glitter,house,idea,water,worship utensils ,தண்ணீர், பளபளப்பு, பூஜை பாத்திரங்கள், மின்னும், யோசனை, வீடு

பிறகு இந்த பாத்திரத்தை அடுப்பை பற்ற வைத்து சூடுபடுத்த வேண்டும். தண்ணீர் நன்றாக கொதித்து பாத்திரங்களில் உள்ள எண்ணெய் பிசுக்குகள் அனைத்தும் பிரிந்து வரும். அதற்குப் பின்னர் அடுப்பை அனைத்து பாத்திரங்களை சுடு தண்ணீரில் இருந்து வெளியே எடுக்க வேண்டும். பிறகு ஒரு சிறிய கிண்ணத்தில் இரண்டு ஸ்பூன் அளவு ஹேண்ட்வாஷ் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் 2 ஸ்பூன் பல் துலக்கும் பேஸ்ட் மற்றும் ஒரு எலுமிச்சை பழத்தை இரண்டாக அறிந்து அதன் சாறை இவற்றுடன் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

பிறகு தண்ணீரை சுத்தமாக துடைத்து விட்டு வீட்டில் சாதாரணமாக பயன்படுத்தும் விபூதியை ஒரு துணியில் லேசாக தொட்டு பூஜை பாத்திரங்கள் முழுவதையும் துடைத்து விட்டால் பூஜை பாத்திரங்கள் நல்லா பளபளப்புடன் மின்னும். அதுமட்டுமல்லாமல் அவ்வளவு சீக்கிரமாக கருக்காமல் இருக்கும்

Tags :
|
|
|